வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! பட்ஜெட் முடிந்த உடன் RBI வெளியிட இருக்கும் குட் நியூஸ்

By Devika Manivannan

வங்கிகளில் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் வாங்கியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஒரு ஆண்டாக அமைந்திருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 1.25% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை அடுத்து வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாகன கடன், வீட்டுக் கடன் மற்றும் தங்க நகை கடன்களுக்கான வட்டியை குறைத்தன.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையின் மூலம் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்களுடைய கடன்களுக்கான ஒட்டுமொத்த இஎம்ஐ தொகையில் பல லட்சங்களை சேமிக்க முடிந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் பிப்ரவரியில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் 4ஆம் தேதி நிதி கொள்கை குழு கூட்டம் தொடங்குகிறது.


RBI repo rate emi

மும்பையில் நடைபெறும் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பிப்ரவரி 6ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ராவால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்படும். கடந்த ஆண்டில் 4 முறை வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிப்ரவரியில் 0.25%, ஏப்ரலில் 0.50%, ஜூனில் 0.50%, டிசம்பரில் 0.25% என மொத்தமாக ரெப்போ வட்டி விகிதம் கடந்த பிப்ரவரியில் 6.50% ஆக இருந்து டிசம்பரில் 5.25% என குறைக்கப்பட்டது.


RBI repo rate emi

வரக்கூடிய நிதி கொள்கை குழு கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு வெளியிட்டுள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட இருப்பது ஆகியவை மேலும் ஒரு வட்டி குறைப்பு சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளன என பேங்க் ஆஃப் அமெரிக்கா அறிக்கை குறிப்பிடுகிறது.

காலி நிலத்துக்கு காசு!! தமிழக அரசின் இந்த வெப்சைட்ல பதிவு பண்ணுங்க..30 வருஷத்துக்கு வருமானம் உறுதி!!

0.25% வரை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. அப்படி குறைந்தால் ரெப்போ வட்டி விகிதம் 5.00%என மாறும். இது நேரடியாக நம்முடைய வங்கி கடன் வட்டி விகிதங்களை குறைக்கும். எனவே நாம் செலுத்தும் மாதாந்திர இஎம்ஐ தொகை குறையும். வீட்டு கடன் வாங்கியவர்களில் ஃபுளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்வு செய்தவர்களுக்கு ஒட்டு மொத்தமாக பல லட்சங்கள் சேமிப்பை ஏற்படுத்தி தரும்.

Work from Home ஊழியர்களுக்கு கட்டம் கட்டும் ஐடி நிறுவனங்கள்!! இன்போசிஸ் அனுப்பிய முக்கிய மெயில்!!

டெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம். எனவே இந்த வட்டி விகிதம் குறையும் போது வங்கிகள் தானாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைக்கின்றன. எனவே புது ஆண்டில் வட்டி குறைப்பு இருக்குமா என லட்சக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Credit: Goodreturns

English summary
Bank of America predicts the RBI will reduce its repo rate by 0.25% to 5.25% at the February 6 MPC meeting, marking the last cut in the current cycle amid benign inflation, softening growth, and rupee weakness.
Story first published: Wednesday, January 28, 2026, 8:42 [IST]
Other articles published on Jan 28, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+