Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரண்மனைக்கு திரும்பும் விராட் கோலி.. VHT தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாட திட்டம்

பெங்களூர் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி, விஜய் ஹசாரே டிராபி தொடரில் எம்.சின்னசுவாமி மைதானத்தில் விளையாட உள்ளார். ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் சிக்கி ஏராளமான ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, உயர்மட்ட போட்டிகள் எதுவும் சின்னசுவாமி மைதானத்தில் நடத்தப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் KSCA-வின் மகாராஜா டிராபி மைசூருக்கு மாற்றப்பட்டது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி உட்பட ஐந்து போட்டிகளும் மாற்றப்பட்டது. இந்த சூழலில் இங்கு போட்டிகள் நடத்த கர்நாடக அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

முதலில், KSCA விஜய் ஹசாரே டிராபி போட்டிகளை ஆளூரில் நடத்தத் திட்டமிட்டது. எனினும், விராட் கோலி தனது அனைத்துப் போட்டிகளையும் தனது RCB-யின் சொந்த மைதானமான சின்னசுவாமியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி மற்றும் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இருவரும் இத்தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர். முதல் மூன்று போட்டிகளில் இவர்கள் பங்கேற்கலாம்.

இந்த வார தொடக்கத்தில், KSCA தலைவர் பிரசாத் மற்றும் துணைத் தலைவர் சுஜித் சோமசுந்தர், பெலகாவியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரைச் சந்தித்தனர். சின்னசுவாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்தன.

விராட் மற்றும் பண்ட் விளையாடினால், 2,000-3,000 ரசிகர்களை அனுமதிக்கும் வகையில் சில கேலரிகளைத் திறக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது, நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், தேவையான மாற்றங்களைச் செய்ய பிரசாத் தலைமையிலான KSCA குழு உறுதியளித்தது. விஜய் ஹசாரே டிராபி போட்டிகள் ஒரு ஆரம்பம் மட்டுமே. அடுத்த ஆண்டு சின்னசுவாமி மைதானம் தனது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்.

மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இந்த அனுமதி குறித்துப் பேசினார். “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கேற்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

“உள்துறை அமைச்சர், KSCA தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும்.” என்றார்.

மேலும், “நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா குழுவின் பரிந்துரைகளை படிப்படியாகச் செயல்படுத்தவும் நாங்கள் எண்ணியுள்ளோம். வெங்கடேஷ் பிரசாத்தும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்,” என்று துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

Story first published: Saturday, December 13, 2025, 19:11 [IST]
Other articles published on Dec 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+