அண்ணன் பெடரர் வந்துட்டாங்க, நடால் வந்துட்டாங்க, டோகோவிச் வந்திட்டிருக்காங்க!
மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதிக்கு மூத்த அண்ணனான ரோஜர் பெடரர், சின்னண்ணனான ரபேல் நடேல் வந்துட்டாங்க. அடுத்ததாக டோகோவிச்சுக்காக காத்திருக்காங்க.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆடவர் பிரிவின் காலிறுத்திக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

செர்பியாவைச் சேரந்த 6 முறை ஆஸ்திரேலிய ஓபன்பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்காக இவர்கள் காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபனில், 14வது முறையாக காலிறுதிக்கு பெடரர் முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹங்கேரியின் மார்டன் பக்சோவிக்ஸை 6-4, 7-6, 6-2 என்ற செட்களில் வென்றார் நடப்பு சாம்பியனான பெடரர்.
20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று புதிய சாதனை படைக்க காத்திருக்கும் பெடரர், 2015ஐத் தவிர, 2004 முதல் தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் பிரிவின் கால் இறுதியில், ஸ்பெயினின் ரபேல் நடால் – குரேஷியாவின் மரின் சில்க், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் – இங்கிலாந்தின் கைல் எட்மண்ட், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் – செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் சந்திக்கின்றனர்.
மகளிர் பிரிவின் காலிறுதியில், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் – அமெரிக்காவின் மேடிசன் கீஸ், பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் – உக்ரைனின் எலினா ஸ்விதோலினா, ஸ்பெயினின் கார்லா சவுரஸ் நவரோ – டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி மோத உள்ளனர்.
கடந்தாண்டு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வென்று, 2016ல் பட்டம் பெற்ற கெர்பர், 4வது சுற்றில் மரிய ஷரபோவாவை வென்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தைவானின் ஹேஷ் சுவீயை 4-6, 6-5, 6-2 என்ற கணக்கில் வென்றார்.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹாலப்புக்காக காலிறுதி சுற்று காத்திருக்கிறது.
Story first published: Monday, January 22, 2018, 13:52 [IST]
Other articles published on Jan 22, 2018


Click it and Unblock the Notifications