Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்ரிங்காவுடன் டென்னிஸ் ஆடிய ஆர்யா.. விஷ்ணுவுடன் கை கோர்த்த லியாண்டர்!

சென்னை: சென்னையில் நடந்து வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரபல டென்னிஸ் வீரர்களுடன் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களான ஆர்யாவும், விஷ்ணுவும் சேர்ந்து ஆடிய காட்சிப் போட்டியும் நடந்து ரசிகர்களை கலகலப்பாக்கியது.

20வது ஏர்செல் சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் திருவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் உலகின் சில முன்னணி வீரர்களும், இந்திய வீரர்களும் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றனர்.

காலிறுதிக்குள் நுழைந்த வாவ்ரிங்கா

காலிறுதிக்குள் நுழைந்த வாவ்ரிங்கா

போட்டியின் 3 வது நாளான நேற்று ஒற்றையர் 2வது சுற்றில் நடப்பு சாம்பியனும் 4ம் நிலை வீரருமான வாவ்ரிங்காவும் (சுவிட்சர்லாந்து), 95ம் நிலை வீரர் போர்னா கோரிச்சும் (குரோஷியா) மோதினர். இதில் வாவ்ரிங்கா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

செம சர்வீஸ

செம சர்வீஸ

மணிக்கு அதிகபட்சமாக 222 கிலோ மீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு கலக்கிய வாவ்ரிங்கா வலைக்கு அருகே ஓடிவந்து பந்தை திருப்புவதிலும் அருமையாக செயல்பட்டார்.

முல்லருடன் சந்திப்பு

முல்லருடன் சந்திப்பு

காலிறுதிப் போட்டியில் வாவ்ரிங்கா, ஜெலஸ் முல்லரைச் சந்திக்கிறார்.

காட்சிப் போட்டி

காட்சிப் போட்டி

முன்னதாக தமிழ்த் திரையுலக நடிகர்களுடன் வாவ்ரிங்காவும், லியாண்டர் பயஸும் கலந்து கொண்ட காட்சிப் போட்டி நடந்தது.

வாவ்ரிங்காவுடன் ஆர்யா

வாவ்ரிங்காவுடன் ஆர்யா

இந்தப் போட்டியில் வாவ்ரி்ங்காவுடன் நடிகர் ஆர்யா மோதினர். அதேபோல லியாண்டர் பயஸுடன், நடிகர் விஷ்ணு கலந்து கொண்டு ஆடினார். இதை ரசிகர்கள் ரசித்துப் பார்த்து மகிழ்ந்தனர்.

Story first published: Thursday, January 8, 2015, 12:35 [IST]
Other articles published on Jan 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+