For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்டர்சன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி...ஆறரை மணி நேரம் போராடி சாதனை

By Aravinthan R

விம்பிள்டன்: விம்பிள்டன் ஆடவர் அரையிறுதியில் கெவின் ஆண்டர்சன், ஜான் இஸ்னர் மோதினர். ஆறரை மணி நேரம் நடந்த நீண்ட போட்டியில் கெவின் ஆண்டர்சன் போராடி வெற்றி பெற்றார்.

97 வருடங்கள் கழித்து விம்பிள்டன் பைனலுக்குள் ஒரு தென்னாபிரிக்கா வீரர் நுழைவது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற இந்த அரையிறுதியில், இரண்டு வீரர்களும் மிகக் கடுமையாக போராடினர்.

anderson beat isner in the longest wimbledon semi final


முதல் செட்டில் ஆரம்பித்த போராட்டம் கடைசி வரை நீடித்தது. முதல் செட்டில் 7-6(6) என்ற புள்ளிகளில் ஆண்டர்சன் கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களை ஆண்டர்சன், ஜான் இஸ்னரிடம் 6-7(5), 6-7(9) என்ற புள்ளிகளில் இழந்தார். முதல் மூன்று செட்களும் டை-பிரேக்கர் வரை சென்று முடிந்தது. நான்காவது செட் 6-4 என்ற கணக்கில் ஆண்டர்சன் கைப்பற்றினார். இந்த செட் மட்டுமே டை-பிரேக்கர் இல்லாத வகையில் முடிந்தது.

இரண்டு வீரர்களும் 2-2 என செட்களை கைப்பற்றியிருக்க, வெற்றியை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் சளைக்காமல் போராடினர். ஒருவர் மற்றவரை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றால் வெற்றி என்ற நிலையில், இருவரும் மாற்றி மாற்றி புள்ளிகளை பெற்று வந்தனர். கடைசியில், 26-24 என்ற கணக்கில் ஐந்தாவது செட்டை ஆண்டர்சன் கைப்பற்றினார்.

6 மணி நேரம், 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டி, பல சாதனைகளை புரிந்தது. இந்த போட்டி, விம்பிள்டன் வரலாற்றில் மிக நீளமான அரையிறுதி என்ற சாதனையும், இரண்டாவது மிக நீளமான விம்பிள்டன் போட்டி என்ற சாதனையும் செய்தது. ஜான் இஸ்னர், விம்பிள்டன் மற்றும் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றின் மிக நீளமான போட்டியில் ஆடி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டி மூன்று நாட்கள் வரை நீடித்தது. மொத்தம் 11 மணி நேரம், 5 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த தொடரின் காலிறுதியில் கெவின் ஆண்டர்சன், 4 மணி நேரம், 13 நிமிடங்கள் போராடி ரோஜர் பெடரரை வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ஆறரை மணி நேரம் களத்தில் நின்று சாதனை புரிந்துள்ளார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள, ஆண்டர்சன், ரபேல் நடால் அல்லது ஜோகொவிக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்றால் மட்டுமே விம்பிள்டன் பட்டத்தை வெல்ல முடியும்.

முதல் அரையிறுதி அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், தொடர்ந்து நடந்த இரண்டாவது அரையிறுதி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று செட்கள் மட்டுமே முடிந்த நிலையில், ஜோகோவிக் இரண்டு செட்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். நடால் ஒரு செட் மட்டும் கைப்பற்றியுள்ள நிலையில், இன்று போட்டி மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







Story first published: Saturday, July 14, 2018, 15:37 [IST]
Other articles published on Jul 14, 2018
English summary
Kevin Anderson beats John Isner in the longest Wimbledon semi final match. The match lasts for 6 hours and 36 minutes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X