Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்.. குட்டைப் பாவாடையில் ஆண்டி.. செம காமெடி

லண்டன்: பிள்ளைங்க ஆசைப்பட்டுட்டா செய்யாம இருக்க முடியுமா.. அதுவும் மகள்கள் ஆசைப்பட்டுட்டால் அதை நிறைவேற்றாமல் ஓயத்தான் முடியுமா.. ஆண்டி முர்ரே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். இந்த லாக்டவுன் பீரியடை தனது பிள்ளைகளுடன் அப்படி ஹேப்பியாக அவர் என்ஜாய் செய்கிறாராம்.

Recommended Video

Cricketers who never got the credit they deserved

இங்கிலாந்துக்காரரான ஆண்டி முர்ரே இங்கிலாந்துக்கு டென்னிஸில் பல புகழ்களைப் பெற்று வந்த சாதனையாளர். இப்போது கொரோனா பீதியால் இங்கிலாந்திலும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் ஆண்டி முர்ரே தனது குடும்பத்தினருடன் ஜாலியாக செலவிட்டு வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பாக பல புகைப்படங்களை அவர் போட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாமே படு ஜாலியாக காமெடியாக இருக்கிறது பார்ப்பதற்கே.

மகளின் மினி ஸ்கர்ட்

மகளின் மினி ஸ்கர்ட்

அதில் ஒன்றுதான் குட்டைப் பாவாடையில் (மினி ஸ்கர்ட்) அவர் காட்சி தரும் படம். திடீரென பார்க்க நமது லுங்கி போல தெரிகிறது. கிட்டப் போய் பார்த்தால்தான் தெரிகிறது அது ஸ்கர்ட் என்று. பெண்கள் அணியும் ஸ்கர்ட். ஆமாங்க அதேதான். அதாவது முர்ரேவின் மகளுடைய ஸ்கர்ட் அது. அதைத்தான் ஐயா ஜாலியாக போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதுதான் வைரலாகியுள்ளது.

மகள் ஆசையை மறுக்க முடியுமா

மகள் ஆசையை மறுக்க முடியுமா

இதுதொடர்பாக அவர் கூறுகையில், உங்களது மகள்கள் அவர்களது டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு விளையாடுமாறு கூறினால் நிச்சயம் நம்மால் மறுக்க முடியாது. அதனால்தான் இதை செய்ய வேண்டி வந்தது. இதுவும் கூட நல்லாதான் இருக்கு என்று கூறி சிலாகித்துள்ளார். இதன் மூலம் தனது பிள்ளைகளை படு ஜாலியாக ஹேப்பியாக அவர் வைத்துள்ளார் என்று தெரிகிறது.

ஒரு பயமும் இல்லை

ஒரு பயமும் இல்லை

கொரோனா குறித்து எனக்கு எந்தப் பயமும் இல்லை. எனது எதிர்காலம் குறித்துக் கூட நான் கவலைப்படவில்லை. இப்போதைய சூழலில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அது போதும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார் முர்ரே. 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நோவாக் ஜோக்கோவிக்குடன் ஒரு இன்ஸ்டாகிராம் சாட்டிலும் பங்கேற்றுப் பேசியிருந்தார்.

மிக மிக புதிய அனுபவம்

மிக மிக புதிய அனுபவம்

தற்போதைய லாக்டவுன் தனது குழந்தைகளுக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்துள்ளதாக கூறும் முர்ரே, அவர்கள் நீச்சலடித்தும், சைக்கிளி்ங் செய்தும் ஜாலியாக உள்ளனர். புதிய வாழ்க்கையை அவர்கள் அனுபவிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இதற்கிடையே ஜோகோவிக்கும் தனது இல்லத்தில் தனித்திருந்து வருகிறார். ஒரு வீரராக இது வித்தியாசமாக இருந்தாலும் ஒரு தந்தையாக, கணவராக இது புதிய அனுபவம் என்று அவரும் சிலிர்த்துக் கூறியுள்ளார்.

அப்பாக்களும் கணவர்களும்

அப்பாக்களும் கணவர்களும்

ஆக மொத்தம் இந்த லாக்டவுன் காரணமாகத்தான் அப்பாக்கள் அப்பாக்களாகவும், கணவர்கள் கணவர்களாகவும் இருக்கிறார்கள் போல. இதற்காகவாவது ஆண்டுக்கு ஒரு மாதம் இதுபோல லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் உலகம் முழுவதும் அன்பும், பாசமும் காதலும் செழித்தோங்கும்.. செய்வார்களா இதைச் செய்வார்களா?

Story first published: Tuesday, April 21, 2020, 11:41 [IST]
Other articles published on Apr 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+