Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல்... முதலிடத்தை கெட்டியாக பிடித்த ஆஷ்லீ பார்டி

ஆண்டின் முதல் டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி தொடர்ந்து முதலிடத்தில் நிலைகொண்டுள்ளார்.

ரோமானிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெக் எந்த போட்டிகளிலும் பங்கேற்காமலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பிரிஸ்பேன் போட்டியில் பங்கேற்ற ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகா புள்ளிகளை தவறவிட்டதால் தன்னுடைய இடத்தை சிமோனா ஹாலேக்கிற்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியல்

டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியல்

டபள்யூ.டி.ஏ.வின் டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் தரவரிசை பட்டியல் இது.

முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி

முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் பிரெஞ்ச் ஓபன், டபள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் தொடர்ந்திருந்த இவர், 7851 புள்ளிகள் பெற்று இந்த ஆண்டும் முதலிடத்தில் நீடித்துள்ளார்.

2வது ஆஸ்திரேலிய நம்பர்.1 வீராங்கனை

2வது ஆஸ்திரேலிய நம்பர்.1 வீராங்கனை

கடந்த 1976ல் ஆஸ்திரேலிய வீராங்கனை எவோன் கூலாகாங் கவ்லி நம்பர் ஒன் இடத்தை பிடித்த நிலையில், அதன்பிறகு தரவரிசையில் முதலிடத்தை ஆஷ்லீ பார்டி தற்போது பிடித்துள்ளார்.

மற்றொரு சாதனையை நிகழ்த்த ஆவல்

மற்றொரு சாதனையை நிகழ்த்த ஆவல்

இந்நிலையில் கடந்த 1976ல் பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரை ஆஸ்திரேலிய வீராங்கனை கிறிஸ்டீன் ஓ'நீல் வெற்றி கொண்ட நிலையில், தன்னுடைய சொந்த மண்ணில் அந்த கோப்பையை வென்று, அந்த சாதனையையும் முறியடிக்க ஆஷ்லீ பார்டி காத்துள்ளார். இந்த மாதத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

ஆஸ்திரேலியாவின் பல இடங்கள் காட்டுத்தீயால் நாசமடைந்துள்ள நிலையில், இந்த வாரத்தில் பிரிஸ்பேன் சர்வதேச போட்டியில் தான் ஆடி வெற்றி கொண்ட பணத்தை அதற்கு தானமாக பார்டி அளித்துள்ளார்.

புள்ளிகளை தவறவிட்ட ஒசாகா

புள்ளிகளை தவறவிட்ட ஒசாகா

இதனிடையே இந்த தரவரிசையில் ஆண்டு துவங்கி எந்த போட்டியிலும் பங்கேற்காத ரோமானிய வீராங்களை சிமோனா ஹாலேப் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பிரிஸ்பேன் போட்டிகளில் பங்கேற்ற ஜப்பானிய வீராங்கனை நயோமி ஒசாகா புள்ளிகளை தவறவிட்டு 4வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

செக் குடியரசு வீராங்கனை

செக் குடியரசு வீராங்கனை

இந்த தரவரிசையில் செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிளிஸ்கோவா 2வது இடத்தையும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Story first published: Monday, January 6, 2020, 18:53 [IST]
Other articles published on Jan 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+