ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது தங்கம் வென்றது இந்தியா-சானியாவுக்கு வெண்கலம்

மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், இந்தியாவின் ப்ரீஜா ஸ்ரீதரன் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்தியாவின் கவிதா ராவத் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ப்ரீஜா 31:50:47 என்ற கணக்கில் முதலிடத்தைப் பிடித்தார். கவிதா ராவத் 31:51.44 என்ற கணக்கில் போட்டி தூரத்தைக் கடந்தார்.
சானியாவுக்கு வெண்கலம்
மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இந்தியா இதுவரை 4 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 32 பதக்கங்களை வென்றுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications