ஆசிய விளையாட்டு-2வது தங்கம் வென்றார் சோம்தேவ்-புதிய சாதனையும் படைத்தார்

இது சோம்தேவுக்குக் கிடைத்த 2வது தங்கமாகும். இந்தியாவுக்கு இதுவரை இதையும் சேர்த்து 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
நேற்றுதான் இந்தியாவின் சனம் சிங்குடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கத்தைத் தட்டிச் சென்றார் சோம்தேவ். இந்த நிலையில் இன்று ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அவர் உஸ்பெக்கிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அதிரடியாக வீழ்த்தி வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், டென்னிஸ் பிரிவில் தனி நபர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதால் சோம்தேவின்
வெற்றி சாதனையாக மாறியுள்ளது.
இந்தியா இதுவரை 7 தங்கப் பதக்கங்களுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.
சோம்தேவ் ஒற்றையர் தரவரிசையில் 106வது இடத்தில் இருப்பவர். ஆனால் தோல்வி கண்ட டெனிஸோ 40வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications