Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்குனே வருவீங்களாடா.?? ஜோகோவிச் கனவை காலி செய்த இளம் வீரர்

டுரின்; டென்னிஸ் உலகில் யார் சிறந்த வீரர் என்ற போட்டி நீண்ட நாட்களாகவே ஜோகோவிச், நடால் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகிய மூன்று பேரின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

ஏனென்றால் மூன்று பேரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றள்ளனர். இந்த நிலையில் ரோஜர் ஃபெடரின் மற்றொரு சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு ஜோகோவிச்சுக்கு கிடைத்தது.

ஒவ்வொரு சீசன் இறுதியில் நடைபெறும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஃபெடரர் 6 முறை வென்றுள்ளார். இந்த தொடரை 5 முறை வென்றுள்ள ஜோகோவிச், இதனை சமன் செய்ய காத்திருந்தார்.

டாப் 8 வீரர்கள்

டாப் 8 வீரர்கள்

டென்னிஸ் தரவரிசையில் உலகின் டாப் 8 வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்க முடியும் . மற்ற தொடரை போல் இது நாக் அவுட் தொடராக நடைபெறாது. 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்குள் மோதுவார்கள். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், அரையிறுதியில் மோதுவார்கள்

அரையிறுதி

அரையிறுதி

நடப்பு தொடரின் குரூப் பிரிவில் ஒரு செட்டை கூட இழக்காமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், தனது ஆக்கோரஷமான ஆட்டத்தால் ஜோகோவிச்சையே தவற செய்ய வைத்தார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ். சுமார் 2 மணி நேரம் 28 நிமிடம் இந்தப் போட்டியில் 7-6.4-6,6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் வென்றார்

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

ஏற்கனவே டோக்யோ ஒலிம்பிக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீட்டுக்கு அனுப்பினார் ஸ்வெரேவ். மேலும் , இதே போன்று அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று ஃபெடரர், நடாலை முந்த இருந்த ஜோகோவிச்சை மெட்வடேவ் தடுத்தார். தற்போது ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரை வெல்ல இருந்த ஜோகோவிச்சின் கனவை மீண்டும் ஸ்வெரேவ் காலி செய்துள்ளார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

ஏ.டி.பி. பைனல்ஸ் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வடேவ்வுடன் ஜெர்மனி வீரர் ஸ்வ்ரேவ் மோத உள்ளார். நடப்பு சாம்பியனான மெட்வடேவ் இந்த தொடரில் தொடர்ந்து 9 முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நடப்பாண்டில் ஸ்வெரேவ்வும், மெட்வடேவும் 58 போட்டிகளை வென்றுள்ளனர். ஜோகோவிச்சை வீழ்த்திய உத்வேகத்துடன் ஸ்வெரேவ் உள்ளது, அவருக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

Story first published: Sunday, November 21, 2021, 17:04 [IST]
Other articles published on Nov 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+