Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் உலகமே வியக்கும் சாதனை.. ஆஸி, ஓபனில் ரஃபேல் நடாலுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரசிகர்கள் ஆரவாரம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடால் 6வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நடால், 7ஆம் நிலை வீரரான இத்தாலியின் பெரேட்டனியை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே நடால் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடாலின் இந்த ஆட்டம், அவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போல் இருந்தது.

நடால் அதிரடி

நடால் அதிரடி

தனது அதிரடி சர்வ்களால் முதல் செட்டை நடால் 6க்கு3 என்ற கணக்கில் வென்றார். நடாலின் தாக்குதல் ஆட்டத்தை பெரேட்டனியால் எதிர்கொள்ள முடியவில்லை.இத்தாலி வீரர் பெரேட்டனி எவ்வளவு முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் 2வது செட்டையும் நடால் 6க்கு2 என்ற கணக்கில் வென்றார்.

இறுதி போட்டிக்கு தகுதி

இறுதி போட்டிக்கு தகுதி

இதனையடுத்து, மூன்றாவது செட்டில் பெரேட்டனி, தனது முழு பலத்தையும் திரட்டி விளையாடினார்.இதனால் மூன்றாவது செட்டில் தடுமாறிய நடால், 3க்கு6 என்ற கணக்கில் இழக்க,4வது செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தினார். நடாலின் stamina வுக்கு,பெரேட்டனியால் ஈடு கொடுக்க முடியவில்லை.

500வது வெற்றி

500வது வெற்றி

இறுதியில் 2 மணி நேரம் 55 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் நடால் 6க்கு3,6க்கு2,3க்கு6,6க்கு3 என்ற செட் கணக்கில் வென்று 6வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இது Hard கோர்டில் நடால் பெறும் 500வது வெற்றியாகும். இதன் மூலம் 29வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நடால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

42 ஆண்டுகள்

42 ஆண்டுகள்

முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் உலகின் முன்னணி வீராங்கனையும், ஆஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி, 6க்கு1,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையான மேடிசன் கீயை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.இதன் மூலம் 42 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச் சுற்றில் தகுதி பெறும் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Story first published: Friday, January 28, 2022, 20:59 [IST]
Other articles published on Jan 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+