Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோகோவிச் விசா மீண்டும் ரத்து.. நீதிமன்றத்தை மீறி ஆஸி, அரசு அதிரடி முடிவு.. டென்னிஸ் உலகில் பரபரப்பு!

பிரிஸ்பேன்: டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சிற்கு நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமைந்த நிலையில் மீண்டும் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச்-ன் கொரோனா தடுப்பூசி பிரச்சினை கடந்த சில நாட்களாகவே விளையாட்டு உலகை ஆக்கிரமித்துள்ளது.

கிராண்ட் ஸ்லாம் பட்டத்திற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துக்கொள்வதற்காக ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் 2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுவர்கள் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. ஆனால் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லாத ஜோகோவிச், மருத்துவ விதிவிலக்குடன் உள்ளே நுழைந்ததால் அவர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அவரின் விசாவை ஆஸ்திரேலியாவின் குடிபெயர்பு அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே ரத்து செய்தார்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இதனை எதிர்த்து ஜோகோவிச் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பே வந்தது. அவரின் விசா செல்லுபடியாகும் என்றும், அவரை ஆஸ்திரேலிய ஓப்பனில் கலந்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு வரும் திங்கட்கிழமை அன்று முதல் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் விசா ரத்து

மீண்டும் விசா ரத்து

இந்நிலையில் மீண்டும் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, மருத்துவ ரீதியாக ஆபத்தை ஏற்படுத்த நினைத்த ஜோகோவிச்சின் விசாவை, எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தியும், நாட்டின் பொது நலனுக்காகவும் ரத்து செய்கிறேன். இதுகுறித்து எல்லை பாதுகாப்புத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் என பல கட்ட ஆலோசனை நடத்தியே பின்பே எடுத்துள்ளேன் என அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

என்ன செய்யப்போகிறார்?

என்ன செய்யப்போகிறார்?

இந்த அறிவிப்பால் ஜோகோவிச் உடனடியாக ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தனது 21வது பட்டத்தை வெல்வதற்காக பெரும் சட்டப்போராட்டம் நடத்தினார். எனினும் அதன் பலனளிக்கவில்லை. இனிமேலும் அவர் மேல்முறையீடு செய்வாரா அல்லது வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Friday, January 14, 2022, 13:38 [IST]
Other articles published on Jan 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+