Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் ரசிகர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் ஜோகோவிச்..தனி நபருக்காக வளையும் சட்டம்; வலுக்கும் சர்ச்சை

மெல்போர்ன்: உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு புத்தாண்டு சர்ச்சையுடனே தொடங்கியுள்ளது.

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர், நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஜோகோவிச் நிலை

ஜோகோவிச் நிலை

ஆம், 2020ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் பட்டங்களை வென்ற ஜோகோவிச், காலெண்டர் ஸ்லாம் எனப்படும் ஒரே ஆண்டில் அனைத்து கிராண்ட் ஸ்லாம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். மேலும், ஆண்டு இறுதியில் ஏ.டி.பி. டென்னிஸ் பைனல்ஸ் தொடரிலும் ஜோகோவிச் இறுதிப் போட்டி வரை கூட வரவில்லை.

ஜோகோவிச்சுக்கு சிக்கல்

ஜோகோவிச்சுக்கு சிக்கல்

இதனால், ஜோகோவிச் ஓய்வில் இருந்த அடுத்த ஆண்டு டென்னிஸ் போட்டிகளுக்கு தயாராக இருந்தார். ஜனவரி மாதம் நடைபெறும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் ஜோகோவிச் இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தவில்லை

தடுப்பூசி செலுத்தவில்லை

ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வேண்டும் என்றால், அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அதைவிடுங்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் தானே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியும். ஆனால் ஜோகோவிச் இதுவரை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை

மருத்துவ சான்றிதழ்

மருத்துவ சான்றிதழ்

இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தமக்கு இருக்கும் உடல் நிலை பிரச்சினை காரணமாகவே தாம் தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை என்றும், தாம் தடுப்பூசி போட தகுதியான நபர் அல்ல என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளதாகவும் ஜோகோவிச் கூறியுள்ளார்.இதனை ஏற்று கொண்ட ஆஸ்திரேலிய டென்னிஸ் சம்மேளனம், ஜோகோவிச் விளையாட அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு பொதமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுமக்கள் கண்டனம்

பொதுமக்கள் கண்டனம்

தடுப்பூசி செலுத்த தகுதியில்லாத நபர்கள் எத்தனையோ பேர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் விதிகள் காரணமாக முடங்கியுள்ளனர். ஆனால் ஜோகோவிச்சுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தை கேள்வி எழுப்பி வருகின்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஜோகோவிச்சின் இந்த செயல், அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Story first published: Wednesday, January 5, 2022, 10:40 [IST]
Other articles published on Jan 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+