Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன் டென்னிஸ்- ஜோகோவிச்சை விளாசிய நடால், “தடுப்பூசி போடுங்க, இல்ல வெளியே போங்க

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது வெறும் விளையாட்டு தொடராக மட்டுமல்லாமல் இரு நாட்டுக்கு இடையே பிரச்சினையாக மாறிவிட்டது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்பது விதி

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஜோகோவிச், தடுப்பூசி செலுத்த தாம் தகுதியில்லாத நபர் என்று மருத்துவ சான்றிதழை பெற்றுள்ளார்.

தடுப்பூசி சர்ச்சை

தடுப்பூசி சர்ச்சை

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று ஆஸ்திரேலிய மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன், ஜோகோவிச்சுக்கு உண்மையில் மருத்துவ ரீதியிலான காரணங்களால் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியம் என்று தெரிவித்தார்.

நுழைய தடை

நுழைய தடை

இந்த நிலையில், ஜோகோவிச் பெற்றுள்ள விசாவிற்கு தடுப்பூசி போடுவதில் இருந்து மருத்துவ ரீதியிலான விலக்கு கிடையாது என்று கூறி, ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஜோகோவிச் தற்போது ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது வரைக்கும் ஜோகோவிச், மெல்போர்னில் உள்ள பார்க் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நடால் கண்டனம்

நடால் கண்டனம்

இதனிடையே, நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால், தடுப்பூசி செலுத்தாத ஜோகோவிச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடால் அளித்துள்ள பேட்டியில், நான் இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டேன், அதனை மீறியும் கொரோனா தொற்று தமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜோகோவிச் எடுத்துள்ள முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

ஜோகோவிச்சே காரணம்

ஜோகோவிச்சே காரணம்

தற்போது ஜோகோவிச்க்கு நடக்கும் விஷயங்களை நினைத்து வருந்துகிறேன். ஆனால அதற்கு முழு காரணம் ஜோகோவிச் தான். தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வேண்டும் என்றால், அவர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை என்றால், திரும்பி செல்ல வேண்டியது தான் என்று கூறியுள்ளார். ஜோகோவிச் சட்ட விதிகளை மதிக்காமல் பிடிவாதம் செய்வதாக பல தரப்பு மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Story first published: Thursday, January 6, 2022, 16:31 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+