For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸி. ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்..!! 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று ரபேல் நடால் சாதனை படைத்தார்.

Recommended Video

Nadal fights back to clinch the Australian Open and lift 21st Grand Slam title | OneIndia Tamil

ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடாலும், ரஷ்ய வீரரும் உலகின் 2ஆம் நிலை வீரரான மேட்வடெவ்வும் பலப்பரீட்சை நடத்தினர்

உலக சாதனை படைக்கும் தருவாயில் நடால் இருந்ததால், இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர்.

மேட்வடெவ் அதிரடி

மேட்வடெவ் அதிரடி

ஆனால் தொடக்கம் முதலே மேட்வடெவ் அதிரடியாக விளையாடி நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். சிறப்பாக விளையாடிய அவர் முதல் செட்டை 6க்கு2 என்ற கணக்கில் வென்றார். இதனைத் தொடர்ந்து 2வது செட்டில் நடால் அதிரடியை காட்ட, மேட்வடெவ் கொஞ்சம் கூட அசராமல் பதில் தாக்குதல் நடத்தினார். இதனால் 2வது செட்டில் 7க்கு6 என்ற கணக்கில் மேட்வடெவ் தனதாக்கினர்.

நடால் பதிலடி

நடால் பதிலடி

இன்னும் ஒரு செட்டைமேட்வடெவ் வென்றால் போட்டியே முடிந்திருக்கும். ஆனால், டென்னிஸ் உலகின் தாம் ஏன் கிங் என்று நிரூபித்தார் நடால். சூழல்கள் நமக்கு எதிராக இருந்தாலும் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை ரசிகர்களுக்கு வெளிக்காட்டிய நடால் அடுத்த 2 செட்களையும் 6க்கு4, 6க்கு4 என்ற கணக்கில் வென்றார்.

மகா யுத்தம்

மகா யுத்தம்

இதனையடுத்து, ஆட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இரண்டு வீரர்களுக்கும் ஒரு மகா யுத்தமே நடைபெற்றது. இதில் நடால் 5க்கு3 என்ற கணக்கில் முன்னிலை பெற, மேட்வடெவ் அடுத்தடுத்து 2 கேம்களை வென்று நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 5க்கு5 என்ற ஸ்கோர் இருக்க, நடால் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து 2 கேம்களை வெல்ல, நடால் 7க்கு5 என்ற கணக்கில் வென்றார்.

21வது கிராண்ட்ஸ்லாம்

21வது கிராண்ட்ஸ்லாம்

சுமார் 5 மணி நேரம் 24 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 2க்கு6, 6க்கு7, 6க்கு4, 6க்கு4, 7க்கு5 என்ற செட் கணக்கில் நடால் வென்று 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். இது ஒட்டுமொத்தமாக நடால் வெல்லும் 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதன் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்றவர்கள் பட்டியலில் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோரை நடால் பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்தார். போட்டி முடிந்ததும் தனது அணியினரை கட்டி பிடித்து நடால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Story first published: Sunday, January 30, 2022, 21:55 [IST]
Other articles published on Jan 30, 2022
English summary
Australia open 2022 Nadal won the 21st Grandslam title and breaks Federer and djokovic record ஆஸி. ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் நடால்..!! 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+