Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி ஓபன் டென்னிஸ்- பெட்டியுடன் ஊருக்கு சென்ற நட்சத்திர வீரர், வீராங்கனைகள்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.

ஒரு நாளில் ஒரு அதிர்ச்சி இருந்தால் தாங்கலாம். ஆனால் டென்னிஸ் ரசிகர்களுக்கு ஒரே நாளில் இவ்வளவு அதிர்ச்சி என்றால் எப்படி..

குறிப்பாக டென்னிசின் அழகிய புயல்கள் மெல்போர்னை மையம் கொள்ளாமல் கரையை கடந்து சென்றால் ரசிகர்கள் என்ன செய்வார்கள்

எம்மா ரடுகானு

எம்மா ரடுகானு

மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் மொண்டங்கரோ வீராங்கனை கோவினிச்சுடன், பிரிட்டன் வீராங்கனை எமா ரடுகானு மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6க்கு4, 4க்கு6, 6க்கு3 என்ற செட் கணக்கில் எமா ரடுகானு தோல்வியை தழுவினார். 19 வயதில் அமெரிக்க ஓபனை வென்று உலக புகழ் பெற்ற அவர் தற்போது தொடக்கத்திலேயே தோல்வியை தழுவினார்

முகுருசா

முகுருசா

இதே போன்று மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருசாவும், பிரான்ஸ் வீராங்கனை கார்னட்டும் மோதினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கார்னட் , 6க்கு3,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். உலகின் 3ஆம் நிலை வீராங்கனை முகுருசா வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆன்டி முர்ரே

ஆன்டி முர்ரே

ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது ஆட்டத்தில் 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஆன்டி முர்ரே, ஜப்பான் வீரர் டேனியலை எதிர்கொண்டார். சுமார் 2 மணி நேரம் 48 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் டேனியல் வெற்றி பெற்றார். இதன் மூலம் இடுப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆன்டி முர்ரே தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறார்

மேட்வடேவ்

மேட்வடேவ்

மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அராத்து வீரரான நிக் கிர்கியாஸை எதிர்கொண்ட ரஷ்ய வீரர் மேட்வடெவ், 7க்கு6, 6க்கு4, 4க்கு6,6க்கு2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி 2 மணி நேரம் 58 நிமிடம் வரை நீடித்தது.

Story first published: Thursday, January 20, 2022, 21:04 [IST]
Other articles published on Jan 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+