Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?

மெல்போர்ன்: நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம், ஜோகோவிச்சின் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாடு தான். தடுப்பூசி செலுத்தாமல் வந்ததால் அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது

இதனை எதிர்த்து, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச் வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து, அவர் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டார்

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

அப்போது ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்தது. இதனால் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ள ஜோகோவிச் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்தது.

ஆஸி. அரசு குற்றச்சாட்டு

ஆஸி. அரசு குற்றச்சாட்டு

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜோகோவிச், மீண்டும் நீதிமன்ற கதவை தட்டினார். ஆனால் ஆஸ்திரேலிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜோகோவிச் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் ஜோகோவிச்சை பார்த்து அவரது ரசிகர்களும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

எதிர்ப்பாளர்களின் ஹீரோ

எதிர்ப்பாளர்களின் ஹீரோ

ஏற்கனவே கொரோனா தடுப்பூசி மக்கள் செலுத்தாமல் இருப்பதால், கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று வருகிறோம். ஆனால் ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிரானவர்களின் ஹீரோவாக மாறிவிட்டதாக தெரிவித்தார். இதனை ஆஸ்திரேலிய அரசு ஏற்க முடியாது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்

3 ஆண்டு தடை?

3 ஆண்டு தடை?

ஆஸ்திரேலிய அரசின் நிலைப்பாட்டை ஏற்று கொண்ட நீதிபதி, ஜோகோவிச்சின் மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து ஜோகோவிச் உடனடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படுகிறார். மேலும், விசா முறைகேடு, கொரோனா தடுப்பூசி குறித்து பொய் தகவல் தெரிவித்த காரணத்தால் அவர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நடால் பதிலடி

நடால் பதிலடி

இதனால் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை புறக்கணிக்கபோவதாக ரசிகர்கள் அறிவித்தனர். அதற்கு பதில தந்துள்ள நடால், யார் விளையாடினாலும், விளையாடாமல் போனாலும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் புகழ் குறையாது என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 16, 2022, 15:50 [IST]
Other articles published on Jan 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+