Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிசில் ஜோகோவிச்சை அசர வைத்த ஸ்மித்.. பதிலுக்கு கிரிக்கெட் ஆடி சிக்சர்கள் அடித்த ஜாம்பவான்-வீடியோ

மெல்போர்ன் : டென்னிஸ் உலகின் 2024 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் 10 முறை சாம்பியன் ஆன ஜோகோவிச் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக மீண்டும் களம் இறங்குகிறார். ஜோகோவிச்சுக்கு சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நடால் கடைசி நேரத்தில் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Australian open 2024 Tennis Legend Djokovic Played cricket and smith shines in tennis

இந்த நிலையில் இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக டென்னிஸ் வீரர் ஜோகோவிச், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து முதலில் டென்னிஸ் ஆடினார். ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் என்பதால் அதற்கு தனி முக்கியத்துவம் கொடுப்பார்கள்.இதனால் டென்னிஸ் போட்டிகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் வந்து மக்களை சந்திப்பார்கள்.

இந்த நிலையில் ஜோகோவிச் பந்தை சர்வ் செய்ய அதனை லாவகமாக ஸ்மித் தடுத்தார். இதனைப் பார்த்தவுடன் வாய் அடைத்துப் போன ஜோகோவிச்சை கீழே போட்டுவிட்டு தனது இரு கைகளையும் தூக்கி ஸ்மித்துக்கு மரியாதை செய்தார். இதன் பிறகு டென்னிஸ் விளையாட்டில் உங்களுடைய திறமையை நீங்கள் காட்டி விட்டீர்கள் கிரிக்கெட்டில் என் திறமையை நான் காட்ட வேண்டாமா என்று ஜோகோவிச் பேட்டை கையில் எடுத்தார்.

முதல் பந்தை ஸ்மித் வீசினார். அதனை ஜோகோவிச் தூக்கி சிக்ஸருக்கு அடித்தார். இதனைப் பார்த்ததும் கிரிக்கெட்டு ரசிகர்களே அசந்து போய்விட்டார்கள். அதன் பிறகு வேறு ஒருவர் மீண்டும் இரண்டு பந்துகளை ஜோக்கோவிச்சுக்கு வீசினார். அந்த இரண்டு பந்தும் மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடத்திற்கு ஜோகோவிச் விரட்டினார். இதனை பார்த்து ரசிகர்கள் பிரமித்து போனார்கள். நீங்கள் டென்னிஸ் களத்திலே இருங்கள். கிரிக்கெட் பக்கம் வந்து விட வேண்டாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பலரும் வீடியோவை பகிர்ந்து கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Story first published: Thursday, January 11, 2024, 22:07 [IST]
Other articles published on Jan 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+