Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Aus open 2025- காலிறுதியில் அல்காரஸ், ஜோகோவிச் மோதல்.. மகளிர் நடப்பு சாம்பியன் சபலென்கா முன்னேற்றம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றிருக்கிறார். இதன் மூலம் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் உடன் அவர் கால் இறுதியில் மோதி உள்ளார்.

தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியுடன் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் விளையாடி வருகிறார். 11 முறை ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச் ஆடவர் ஒற்றை பிரிவின் நான்காவது சுற்றில் செக் குடியரசு வீரரான ஜிரி லெஹேக்கா வை எதிர்கொண்டார்.

australian open 2025 tennis djokovic carlos alcaraz sabalenka

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6க்கு 3, 6க்கு 4 ,7 க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் கால் இறுதியில் நட்சத்திர வீரர் அல்காரஸ் உடன் மோதுகிறார். கடந்த இரண்டு முறை விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆல்காரசுடன் ஜோகோவிச் தோல்வியை தழுவிய நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அதற்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் காலிறுதியில் மோத உள்ளது இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதேபோன்று ஜெர்மனியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் உடன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். பிரான்ஸ் வீரர் யுகோ ஹம்பட்டை ஆறுக்கு ஒன்று, இரண்டுக்கு ஆறு, 6க்கு 3, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முன்னேறி இருக்கிறார்.

கடந்த 14 முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு ஸ்வெரேவ் தகுதி பெற்றுள்ள நிலையில் இதுவரை ஒரு முறை கூட அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது கிடையாது. இதேபோன்று மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன அரீனா சபலெங்கா கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்புடன் சபலேங்கா விளையாடி வருகிறார். நான்காவது சுற்றில் ரஷ்யாவை சேர்ந்த 17 வயது வீராங்கனை மீரா ஆண்ட்ரூபாவை எதிர்கொண்ட பெல்லாரசின் சபலெங்கா 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோன்று மூன்றாம் நிலை அமெரிக்க வீராங்கனை ஆன கொகோ காப் ஐந்துக்கு ஏழு, ஆறுக்கு இரண்டு, ஆறு க்கு 1 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை பென்னிச்சை வீழ்த்தினார்.

Story first published: Sunday, January 19, 2025, 17:51 [IST]
Other articles published on Jan 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+