Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்... 45 வயதில் களத்தில் போராடிய வீனஸ் வில்லியம்ஸ்.. அல்காரஸ் வெற்றி

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கியதன் மூலம், வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸ் வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தார். 45 வயதில், தரவரிசையில் 576-வது இடத்தில் இருந்த இவர், ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற மிக வயதான வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். எனினும், தனது முதல் சுற்றில் ஒல்கா டானிலோவிச்சிடம் 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

மூன்றாவது செட்டில் 4-0 என முன்னிலை பெற்றிருந்த வீனஸ், வெற்றியை நெருங்கினார். ஆனால், அபாரமாக மீண்டு வந்த டானிலோவிச், அடுத்தடுத்து ஆறு கேம்களை வென்று வெற்றியைக் கைப்பற்றினார். 14 1/2 நிமிடங்கள் நீடித்த தனது சர்வீஸ் கேமில் போராடிய வீனஸ், இறுதியில் மூன்றாவது பிரேக் பாயிண்டில் தடுமாறினார்.

வீனஸ் 1998-ல் தனது 17-வது வயதில் ஆஸ்திரேலிய ஓபனில் அறிமுகமாகி காலிறுதி வரை முன்னேறினார். இத்தொடரில் சாம்பியன் பட்டம் எட்டாக் கனியாகவே உள்ளது; 2003 மற்றும் 2017 இறுதிப் போட்டிகளில் சகோதரி செரீனாவிடம் தோல்வியுற்றார். கடந்த ஆண்டு வாஷிங்டனில் வென்ற ஒற்றைப் போட்டிக்குப் பின், ஐந்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு அவர் இத்தொடரில் பங்கேற்றார். இத்தாலியர் ஆண்ட்ரியா பிரேட்டியை கடந்த டிசம்பரில் வீனஸ் மணந்தார்.

இதே போன்று நட்சத்திர வீரரான கார்லோஸ் அல்கராஸ், ஆஸ்திரேலிய ஓபனில் தனது கிராண்ட் ஸ்லாம் கனவுப் பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார். முதல் சுற்றில் உள்ளூர் வீரர் ஆடம் வால்டனை சவாலான மூன்று செட்களாகப் போராடி, 6-3, 7-6 , 6-2 என்ற புள்ளி கணக்கில் வென்றார். ஜெர்மனியின் யன்னிக் ஹான்ஃப்மனுடனான இரண்டாவது சுற்று மோதல் அவருக்கு உறுதியானது.

அல்கராஸ், ஆஸ்திரேலியாவுக்கு வந்த நான்கு பயணங்களில் காலிறுதிக்கு மேல் சென்றதில்லை. கடந்த ஆண்டில் நோவக் ஜோகோவிச்சிடமும், அதற்கு முந்தைய ஆண்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோற்றார். இந்த முறை வென்றால், ரஃபேல் நடால் (24), பியோர்ன் போர்க் (23) ஆகியோரை முந்தி, இளம் கிராண்ட் ஸ்லாம் வின்னர், ஓபன் ஏழு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைப்பார்.

Story first published: Monday, January 19, 2026, 16:26 [IST]
Other articles published on Jan 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+