Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2026.. சாதனை படைப்பாரா அல்காரஸ், சின்னர்.. எந்த சேனலில் பார்க்கலாம்?

மெல்போர்ன்: 2026ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், தனது மூன்றாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இன்று களமிறங்கியுள்ளார். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில், அவர் மூன்றாவது நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார்.

ஜானிக் சின்னர், தொடர்ந்து மூன்று ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற இரண்டாவது வீரராகும் குறிக்கோளுடன் உள்ளார். 24 கிராண்ட் ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான நோவக் ஜோகோவிச் மட்டுமே இதற்கு முன் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் 10 பட்டங்களுடன் வெற்றிகரமான வீரரான நான்காம் நிலை ஜோகோவிச், 2011-13 மற்றும் 2019-21-ல் இருமுறை மூன்று பட்டங்களை வென்றவர்.

நான்கு கிராண்ட் ஸ்லாம் வென்ற சின்னர், ஜோகோவிச் இருவரும் உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்கொள்வார்கள். ஆறு கிராண்ட் ஸ்லாம் வென்ற அல்கராஸ், ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லாதவர். விம்பிள்டன், பிரெஞ்சு, யுஎஸ் ஓபனில் தலா இருமுறை சாம்பியனான அல்கராஸ், மெல்போர்னில் கரியர் கிராண்ட் ஸ்லாம் கனவை நிறைவேற்றத் துடிக்கிறார்.

பெண்களின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் ஒன்பதாம் நிலை வீராங்கனை மேடிசன் கீஸ், நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறார். கடந்த ஆண்டு உலகின் நம்பர் 1 வீராங்கனை அரியானா சபலென்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

முதல் நிலை வீராங்கனை அரியானா சபலென்கா, 2023, 2024 சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து, தனது மூன்றாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்ல குறிக்கோள் கொண்டுள்ளார். ஆறு கிராண்ட் ஸ்லாம் வென்ற இரண்டாம் நிலை போலந்தின் இகா ஸ்வியாடெக் மற்றும் மூன்றாம் நிலை கோகோ காஃப் ஆகியோரும் பெண்களின் ஒற்றையர் பட்டத்திற்காகப் போட்டியிடுகின்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் 2026 பிரதான சுற்றுக்கு இந்திய டென்னிஸ் வீரர்கள் நிக்கி பூனச்சா மற்றும் யுகி பாம்ப்ரி தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவின் முதல் தர இரட்டையர் வீரரான யுகி பாம்ப்ரி (உலக தரவரிசை 21), ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் உடன் (10வது இடம்) ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிடுகிறார். நிக்கி பூனச்சா மற்றும் அவரது தாய்லாந்து பார்ட்னர் புரூச்சியா இசாரோ, நவம்பரில் நடந்த ஆசிய-பசிபிக் வைல்ட் கார்டு பிளே-ஆஃப் வழியாகத் தகுதி பெற்றனர்.

இந்தியாவில் ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் போட்டிகள் சோனி டென் 1, சோனி டென் 1 HD, சோனி டென் 2, சோனி டென் 2 HD, சோனி டென் 3 (இந்தி), சோனி டென் 3 HD (இந்தி), சோனி டென் 4 (தமிழ்), சோனி டென் 4 (தெலுங்கு) மற்றும் சோனி டென் 4 HD ஆகிய டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பாகும். சோனி LIV செயலி மற்றும் இணையதளத்திலும் நேரடியாக ஸ்ட்ரீமிங்கை காணலாம்.இந்தப் போட்டிகள் அதிகாலை 5.30 மணியிலிருந்து தொடங்கும்.

Story first published: Sunday, January 18, 2026, 16:33 [IST]
Other articles published on Jan 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+