Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் 2026: நடப்பு சாம்பியன் மேடீசன் கீஸ் தோல்வி.. காலிறுதிக்கு ஜோகோவிச், சின்னர் தகுதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் களத்தில், ஜானிக் சின்னர் தனது பலத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேநேரம், நடப்பு சாம்பியனான மேடிசன் கீஸ் வீழ்த்தப்பட்டார். மெல்போர்னில் , ஐந்தாவது நிலை வீரரான லோரென்சோ முசெட்டி, கடும் வெப்பத்திலும் போராடி நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற இகா ஸ்வியாடெக் அதிரடியாக முன்னேறினார்.

இரண்டு முறை சாம்பியனான சின்னர், தனது சக இத்தாலியரும் நெருங்கிய நண்பருமான லூசியானோ டார்டெரியை 6-1, 6-3, 7-6 (7/2) என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார். இரண்டாவது நிலை வீரரான சின்னர், அடுத்ததாக அமெரிக்காவின் எட்டாவது நிலை வீரர் பென் ஷெல்டன் அல்லது நார்வேயின் 12வது நிலை வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்வார். ஜோகோவிச்சும், சின்னர்ரும் அரையிறுதியில் மோதும் வாய்ப்புள்ளது.

இந்தப் போட்டி குறித்து பேசிய சின்னர் "ஆட்டத்தை முடிப்பது கடினமாக இருந்தது, மூன்று செட்களிலும் வென்றதில் மகிழ்ச்சி." இந்த ஆட்டத்தில் சின்னர் 19 ஏஸ்களை வீசினார். தனது கடின உழைப்பு பலனளித்ததாகக் குறிப்பிட்ட அவர், "மேம்படுத்த இன்னும் நிறைய இடமுள்ளது, ஆனால் இந்த புதிய சீசனில் நான் திரும்பி வந்த விதத்தில் மகிழ்ச்சி" என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு யு.எஸ். ஓபன் மற்றும் விம்பிள்டனில் இறுதிப் போட்டிக்கு வந்த அனிசிமோவா, சீனாவின் வாங் ஜின்யுவை 7-6 (7/4), 6-4 என்ற கணக்கில் வென்றார். இந்தப் போட்டிக்கு முன், கடும் வெப்பம் காரணமாக ஐஸ் பைகளில் தன்னை குளிர்வித்துக் கொண்டார். ஆறாவது நிலை வீராங்கனையான 31 வயதான பெகுலா, இதுவரை எட்டாக்கனியாக இருக்கும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைத் துரத்தி வருகிறார். 2024 யு.எஸ். ஓபனில் இறுதிப் போட்டிக்கு வந்தது அவரது சிறந்த சாதனையாகும்.

நடப்பு சாட்பியனான மேடிசன் கீஸ், பெகுலாவின் 17 தவறுகளுக்கு எதிராக 27 தவறுகளையும், 6 இரட்டை தவறுகளையும் செய்து தனது சாம்பியன் பட்டத்தை தற்காப்பதில் தோல்வியடைந்தார். பெகுலாவுடன் செய்த ஒரு பந்தயத்தின்படி, கீஸ் உருக்கிய செடார் சீஸ் தடவிய ஆப்பிள் பை சாப்பிடுவார். இது குறித்து பேசிய கீஸ், "பந்தயம் என்பது பந்தயம்தான், எனவே நான் அதைச் செய்வேன். நான் நினைப்பதை விட இது அருவருப்பாக இருக்காது என்று நம்புகிறேன், பார்ப்போம்" என்று கூறிய கீஸ், தோல்வி அடைந்தபோதிலும் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஐந்தாவது நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா, பெல்ஜியத்தின் 21வது நிலை வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது நிலை வீராங்கனை ஸ்வியாடெக்கை எதிர்கொள்வார். போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற நிலையில், தனது முதல் ஆஸ்திரேலிய கிரீடத்தை நெருங்க, உள்ளூர் தகுதிச் சுற்று வீராங்கனை மேடிசன் இங்லிஸை 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.

168வது இடத்தில் உள்ள இங்லிஸ், இரண்டு முறை ஆஸி. ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா மூன்றாவது சுற்று மோதலில் இருந்து காயம் காரணமாக விலகிய பின்னர், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய போட்டியில் களமிறங்கினார். நான்காவது சுற்றுக்கு முன்னேறியது இங்லிஸுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் Au$480,000 (US$330,000) பணத்தைப் பெற்றுத் தந்தது.

சனிக்கிழமை கடுமையான வானிலையால் போட்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில், திங்களன்றும் வெப்பநிலை மீண்டும் கடுமையாக உயர்ந்தது. வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திங்களன்று நீண்ட போட்டிகளுக்கு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் 10 நிமிட இடைவேளைகள் அனுமதிக்கப்பட்டன. செவ்வாயன்று வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு, நடந்த போட்டியில், ஜோகோவிச் 20 வயது ஜாகப் மென்சிக்கை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செக் வீரர் ஞாயிற்றுக்கிழமை காயம் காரணமாக விலகியதால், 10 முறை சாம்பியனான ஜோகோவிச் ஒரு பந்துகூட அடிக்காமல் காலிறுதிக்கு முன்னேறினார். 38 வயதான செர்பிய வீரர் முசெட்டியை எதிர்கொள்வார்.

Story first published: Monday, January 26, 2026, 20:27 [IST]
Other articles published on Jan 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+