சானியாவின் கனவு கலைந்தது...!

சானியா - ஹோரியா ஜோடி, கனடாவின் டேணியல் நெஸ்டர் மற்றும் பிரான்சின் கிறிஸ்டினா மெலடெனோவிக் ஜோடியிடம் 6-3, 6- 2என்ற நேர் செட்களில் தோற்றுப் போனது.
நெஸ்டர் ஜோடி கடந்த ஆண்டு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சானியா ஜோடியை, இந்த ஜோடி எளிதாக வீழ்த்தி விட்டது. போட்டி 58 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
டேணியல் நெஸ்டர் ஆடவர் இரட்டையர் பிரிவில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற சாதனையாளர் என்பது நினைவிருக்கலாம். இப்போது அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார். ஏற்கனவே 2007ம் ஆண்டிலும் அவர் பட்டம் வென்றிருந்தார்.
Story first published: Sunday, January 26, 2014, 13:23 [IST]
Other articles published on Jan 26, 2014


Click it and Unblock the Notifications