Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் நிறைய கிராண்ட் ஸ்லாம் போட்டிகள்ல கலந்துக்கணும்.. தோற்றாலும் பெருமையாத்தான் இருக்கு

நியூயார்க் : யுஎஸ் ஓபன் டென்னிசில் மகளிர் தனிநபர் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஸரெங்காவை 3 செட்களில் போட்டியிட்டு தோற்கடித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி வரை வந்துள்ள அஸரெங்கா, தோற்றாலும் பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அஸரெங்கா தோல்வி

அஸரெங்கா தோல்வி

நியூயார்க்கில் நேற்று நடந்து முடிந்துள்ள யுஎஸ் ஓபன் 2020 டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசின் விக்டோரியா அஸரெங்காவை 3 செட்களில் போட்டியிட்டு வெற்றி கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் செரீனா வில்லியம்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அஸரெங்கா தற்போது தோல்வியை கண்டுள்ளார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கடந்த 2012 மற்றும் 2013ல் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள அஸரெங்கா, அதையடுத்து சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாம் டைட்டிலின் இறுதிப்போட்டி வரையிலும் வரமுடியாமல் திணறிய நிலையில், தற்போது இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தன்னை நிரூபித்துள்ளார்.

பல போட்டிகளில் பங்கேற்க உத்வேகம்

பல போட்டிகளில் பங்கேற்க உத்வேகம்

இந்நிலையில் தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தனக்கு பெருமை அளித்துள்ளதாக அஸரெங்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் மேலும் பல கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க உத்வேகம் பிறந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தோல்வி வருத்தமளித்தது

தோல்வி வருத்தமளித்தது

கடந்த 2 வாரங்களாக யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடிவந்த அஸரெங்கா, இந்த காலகட்டம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாக தெரிவித்துள்ளார். இந்த தோல்வி தனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை என்றும் ஆனால் வருத்தமளித்ததாகவும் அஸரெங்கா மேலும் கூறினார். முடிவு குறித்து கவலை கொள்ளாமல் முனைப்புடன் தான் போட்டிகளை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Story first published: Sunday, September 13, 2020, 13:22 [IST]
Other articles published on Sep 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+