
ஹாட்ரிக் வெற்றி
பிஎன்பி பரிபாஸ் கோப்பை, மயாமி ஓபன் டென்னிஸ் போட்டி கோப்பை, டபுள்யூடிஏ ஃபேமிலி சர்க்கிள் கப் ஆகிய 3 போட்டிகளை சானியா, ஹிங்கிஸ் ஜோடி அடுத்தடுத்து வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

நம்பர் ஒன்
ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள சானியா மிர்சா, மார்டினா ஹிங்கிஸ் ஜோடி உலக டென்னிஸ் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை சானியா பெற்றுள்ளார்.
சானியா
இந்த சாதனையை படைத்துள்ள முதல் இந்திய பெண் நான் என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. நான் விளையாடும் வரை கடுமையாக உழைப்பேன். உங்கள் அனைவருக்கும் என் ஹக்(hug) என்று சானியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நம்புங்கள்
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று அனைத்து இளம் பெண்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் உங்களை நம்பினால் இந்த உலகிற்கு உங்கள் மீது நம்பிக்கை வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று ட்வீட் செய்துள்ளார் சானியா.
சமர்பிக்கிறேன்
இத்தனை ஆண்டுகளாக... கனவு நனவாகியுள்ளது. இதை உங்களுக்கு சமர்பிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைக்காதவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று ட்விட்டரில் சானியா கூறியுள்ளார்.
நன்றி
நான் பலருக்கு நன்றி தெரிவிக்க வேண்டி உள்ளது. முதலில் நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்கிறார் சானியா.
குடும்பம்
என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வரும் என் குடும்பத்தார், அன்புக்குரியவர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், என்னுடயை பார்ட்னர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி என்று கூறியுள்ளார் சானியா மிர்சா.


Click it and Unblock the Notifications











