டாப் 10 டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முன்னேறிய சானியா: பூபதி பாராட்டு
டெல்லி: டென்னிஸ் இரட்டையர் பிரிவில், தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ள சானியா மிர்சாவிற்கு, மகேஷ் பூபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது டிவிட்டர் தளத்தில் கூறியதாவது, இரட்டையர் பிரிவில், முதல் 10 இடங்களுக்குள் வந்த உங்களை வரவேற்கிறேன். இது மிகப் பெரிய சாதனை. அதே நிலையிலேயே தொடருங்கள், என சானியாவிற்கு வாழ்த்து அனுப்பி உள்ளார்.
இந்தாண்டு ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றிலேயே வெளியேறிய சானியா தரவரிசை பட்டியலில் 64வது இடத்தில் இருந்து 81வது இடத்திற்கு இறங்கினார். ஆனால், கடந்தாண்டு அமெரிக்க ஓபன் தொடரில் 2ம் சுற்றில் சாஹர் பீரிடம் தோல்வியடைந்த சானியா 5 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.
அதன்பின் முழங்கால் காயத்தால் தொடர்ந்துள்ள போட்டிகளில் இருந்து வெளியேறினார். சானியாவின் காயத்தால், இந்தோ-ரஷ்யா ஜோடி புள்ளிகள் அடிப்படையில் தகுதி இழக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், 4788 புள்ளிகளுடன் உள்ள சானியா ஜோடியை, யாரோசலாவா ஸ்விடோவா மற்றும் அமெரிக்காவின் வைனா கிங் ஜோடி 4685 புள்ளிகளுடன் மிகவும் அருகில் உள்ளது.


Click it and Unblock the Notifications