முதல் முறையாக ஆஸி ஓபன் அரையிறுதியில் போபன்னா
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவின் அரை இறுதிக்கு இந்தியாவின் ரோஹன் போபன்னா, ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி முன்னேறியது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் கால் இறுதியில், இந்தியாவின் ரோஹன் போபன்னா, ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி, 6-4, 7-6 என்ற செட்களில் நடப்பு சாம்பியன் ஜூவான் செபாஸ்டியன் காபல், அபிகோயில் ஸ்பியர்ஸ் ஜோடியை வென்றது.

இதன் மூலம், முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் போபன்னா விளையாட உள்ளார். கடந்தாண்டு பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் படத்தை போபன்னா வென்றார். முன்னதாக, 2010ல் யுஎஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் பைனலில் போபன்னா விளையாடினார்.
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி மற்றும் சானியா மிர்சா ஆகியோரைத் தொடர்ந்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்றவர் போபன்னா.
போபன்னாவுடன் கலப்பு இரட்டையரில் விளையாடும் டிமியா பாபோஸ், பிரான்சின் கிறிஸ்டியானா மாதனோவிக் உடன் சேர்ந்து, மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
Story first published: Friday, January 26, 2018, 16:48 [IST]
Other articles published on Jan 26, 2018


Click it and Unblock the Notifications