Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் 2026: முதல் முறையாக வென்று அல்காரஸ் புதிய சாதனை.. பைனலில் ஜோகோவிச் போராடி தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றினார். இப்போட்டி மூலம், 22 வயதில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அல்காரஸ் அடைந்தார்.

அல்காரஸ் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய பட்டங்களை தலா இருமுறை வென்றிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றதன் மூலம், டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் கைப்பற்றிய வீரர் என்ற அரிய அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ளார்.

மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியில், அல்காரஸ் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபனை பத்து முறை வென்ற ஜோகோவிச், மொத்தம் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன், 25வது பட்டத்தை வென்று சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்கினார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்லாத ஜோகோவிச், இந்தப் போட்டியில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 வயதிலும் அவர் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

ஆனால், சுதாரித்துக்கொண்ட அல்காரஸ் அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். ஜோகோவிச்சை விட 16 வயது இளையவர் என்பதால், அல்காரசின் இளமைத் துடிப்புக்கும் ஆக்ரோஷத்திற்கும் ஜோகோவிச்சால் ஈடுகொடுக்க இயலவில்லை. இதனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை முறையே 6-2, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அல்காரஸ் முன்னிலை பெற்றார்.

நான்காவது செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு வீரர்களும் மாறி மாறி கேம்களை வென்று அபாரமாகப் போராடினர். ஒரு கட்டத்தில் 5-5 என சமநிலை ஏற்பட்டபோது, அல்காரஸ் தனது அதிரடி ஆக்ரோஷத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து இரண்டு கேம்களை வென்று செட்டைத் தனதாக்கினார்.

இதன் மூலம், நான்காவது செட்டை அல்காரஸ் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். மொத்தம் 3 மணி 2 நிமிடம் நீடித்த இப்போட்டியில், 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அல்காரஸ் தனது முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். அவருக்கு இந்திய மதிப்பில் ₹25.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Story first published: Sunday, February 1, 2026, 17:39 [IST]
Other articles published on Feb 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+