டெல்லி: காமன்வெல்த் போட்டியில், டென்னிஸ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் சோம்தேவ் தேவ்வர்மன். ஒற்றையர் போட்டியில் அவர் சாம்பியனானார்.
உலக அளவில் 97வது இடத்தில் இருக்கும் சோம்தேவ் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கிரேக் ஜோன்ஸை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் 6-4, 6-2 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார் சோம்தேவ்.
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா ஆகிய ஸ்டார்கள் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் சோம்தேவ் அதை நிறைவேற்றி இந்தியடென்னிஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
மேலும் காமன்வெல்த் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்குக்கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு 29 தங்கம்
இந்தியா நேற்றைய போட்டியின் இறுதியில், 29 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று மட்டும் 5 தங்கப் பதக்கங்கள் இந்தியாவுக்குக்கிடைத்தன.
29 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.