மகளிர் டேபிள் டென்னிஸ்-இலங்கையை 3-0 என்ற கணக்கில் விரட்டியது இந்தியா

யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்த முதல் போட்டியில், மோமா தாஸ், இலங்கையின் இஷரா மதுராங்கி தர்ஷிகாவை 11-4, 11-5, 11-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
அதேபோலஇன்னொரு போட்டியில்இந்தியாவின் ஷாமினி குமரசேன், இலங்கையின் நுவானி நவோதயாவை 11-9, 11-9, 11-7 என்ற நேர் செட்களில் வென்றார்.
அதேபோல நடப்பு தேசிய சாம்பியனான பாலோமி கதக், இலங்கையின் கவிந்தி ருக்மாலியை 11-8, 11-8, 11-7 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இலங்கையின் கதையை முடித்தார்.
அடுத்து வரும் குழுப் போட்டியில் இந்திய வீராங்கனைகள், நியூசிலாந்து, கானாவை சந்திக்கவுள்ளனர்.
டேபிள் டென்னிஸ் பிரிவில் மொத்தம் 6 தங்கப் பதக்கங்களுடன் 21 பதக்கங்கள் காத்துள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications