டெல்லி: காமன்வெல்த் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் காலிறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தகுதி பெற்றார்.
இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் இலங்கையின் அம்ரேஷ் ஜெயவிக்ரமேயை 6-0, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சுருட்டி விட்டார் சோம்தேவ். வெறும் 41 நிமிடங்களில் போட்டி முடிந்து விட்டது. சோம்தேவன் விளாசலில் சிக்கி அம்ரேஷ் பரிதாபமாக சுருண்டு போனார்.
கொஞ்சம் கூடபோட்டியைக் கொடுக்கவில்லை அம்ரேஷ். ஒரே ஒரு கேமை மட்டுமே அவர் வென்றார். அதுவும் இல்லாவிட்டால் சுத்தமாக வெள்ளையடிக்கப்பட்டிருப்பார். இதில் ஏகப்பட்ட தவறுகளை வேறு அவர் செய்தார்.
அடுத்து ஸ்காட்லாந்தின் காலின் பிளமிங், நியூசிலாந்தின் ரூபின் சதாம் ஆகியோருக்கு இடையிலான போட்டியில் வெல்லும் வீரருடன் காலிறுதியில் மோதவுள்ளார் சோம்தேவ்.
இன்று சானியா மிர்ஸாவும், ரோஹன் போபன்னாவும் தத்தமது 2வது சுற்று ஒற்றையர் போட்டியில் மோதவுள்ளனர்.