Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்... வேற என்ன கொரோனா தான் காரணம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 18ம் தேதி துவங்கவிருந்த இந்த தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜனவரி 15ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு வந்து குவாரன்டைனில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன்

ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன்

ஆஸ்திரேலிய ஓபன் 2020 தொடர் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது. மேலும் அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்பட்டன. விம்பிள்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா காரணமாக இந்த ஆண்டு இந்த போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றன.

பிப்ரவரிக்கு தள்ளிவைப்பு

பிப்ரவரிக்கு தள்ளிவைப்பு

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் ஜனவரி 18ம் தேதி துவங்கி 31ம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தொடர் பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குவாரன்டைனில் ஈடுபடும் வீரர்கள்

குவாரன்டைனில் ஈடுபடும் வீரர்கள்

பிப்ரவரி 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரும் ஜனவரி 15ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு வந்து குவாரன்டைனில் ஈடுபட உள்ளதாகவும் அறவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட உள்ளது.

ஜன. 10 முதல் 13 வரை

ஜன. 10 முதல் 13 வரை

இந்த தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் வரும் ஜனவரி 10ம் தேதி முதல் 13ம் தேதிவரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் டைட்டிலை வெற்றி பெற செர்பிய வீரர் நோவக் டிஜோகோவிக் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 17, 2020, 19:39 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+