Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்-ஜோகோவிக் சாம்பியனானார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஒபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவோக் ஜோகோவிக் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை அழர் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அதிரடியாக வீழ்த்தி பட்டத்தைப் பெற்றார்.

இந்தத் தோல்வியின் மூலம் 75 ஆண்டு காலமாக இங்கிலாந்துக்குக் கனவாகவே இருந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் இந்த முறையும் கானல் நீராகியுள்ளது.

மூன்று முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்தும் பட்டத்தை நழுவ விட்டுள்ளார் முர்ரே. இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் (2008, 2010) பெடரரிடம் தோல்வியுற்றிருந்தார்.

ஜோகோவிக் ஏற்கனவே 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவர். தற்போது 2வது முறையாக பட்டத்தைப் பெற்றுள்ளார்.

முன்னதாக நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கிளிஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இறுதிப் போட்டியில் லி நா கடுமையாகப் போராடி தோல்வியைத் தழுவினார்.

அதேபோல ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஜோடி அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களிடம் தோல்வியுற்று தங்களது ஆஸ்திரேலிய பட்டக் கனவை இழந்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+