ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி கொடுத்த கொரிய வீரர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரர், ரபேல் நடாலுக்கு முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அவருக்கு தென்கொரிய வீரர் அதிர்ச்சி அளித்தார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆடவர் பிரிவின் காலிறுத்திக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், ரபேல் நடால் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

ஆடவர் பிரிவின் கால் இறுதியில், ஸ்பெயினின் ரபேல் நடால் – குரேஷியாவின் மரின் சில்க், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் – இங்கிலாந்தின் கைல் எட்மண்ட், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் – செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் சந்திக்கின்றனர்.
இந்த நிலையில் மற்றொரு காலிறுதிக்கு, 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற ஜோகோவிச் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தென் கொரியாவின் ஹூவான் சங்க் உடன் மோதினார்.
துவக்கம் முதலே, ஜோகோவிச்சின் ஸ்டைலான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புள்ளிகளை சேர்த்தார் சங்க். 3 மணி நேரம், 21 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 7-6, 7-5, 7-6 என்ற செட்களில் சங்க் வென்றார்.
இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு நுழைந்த முதல் கொரிய வீரரானார் காலிறுதியில் அமெரிக்காவின் டென்னிஸ் சான்ட்கிரெனை அவர் சந்திக்கிறார்.
Story first published: Wednesday, January 24, 2018, 14:55 [IST]
Other articles published on Jan 24, 2018


Click it and Unblock the Notifications