Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 லட்சம் தர்றேன்.. டேட்டிங் போலாமா.. ஓகே சொன்ன போச்சார்ட்.. அதிர வைத்த இன்ஸ்டா "ஏலம்"

டோரன்டோ: சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான நிதியை கொடுக்க தயாரான ரசிகருடன் டேட்டிங் போக சம்மதம் கொடுத்துள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை யூஜெனி போச்சார்ட்.

Recommended Video

ரசிகர்கள் இல்லாம டி20 தொடர் நினைச்சு பார்க்கக்கூட முடியல - ஆலன் பார்டர்

கனடாவைச் சேர்ந்தவர் போச்சார்ட். அருமையான டென்னிஸ் ஆட்டக்காரர். இவர்தான் இப்போது இப்படிக் கூறி அதிர வைத்துள்ளார். பிற உலக நாடுகளைப் போலவே கனடாவும் கொரோனாவைரஸ் சிக்கலில் மாட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்காக பலரும் நிதி சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் யூஜெனி போச்சார்டும் நிதி சேகரிக்கிறார். அதன் பொருட்டுதான் இந்த டேட்டிங் அறிவிப்பு. மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக இவர் நிதி சேகரித்து வருகிறார். இவர்களுக்காக தீவிரமான நிதி சேகரிப்பில் அவர் ஈடுபட்டுள்ளார்.

பாய் பிரண்டுடன் தனிமையில்

பாய் பிரண்டுடன் தனிமையில்

சமீபத்தில்தான் அவர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், ஒரு காதலருடன் தனிமையில் இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார் போச்சார்ட். போச்சார்ட் டேட்டிங் போவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட 2017ம் ஆண்டு சூப்பர் பவுல் பெட்டில் கலந்து கொண்டு ஒரு ரசிகருடன் அவர் டேட்டிங் போனது நினைவிருக்கலாம். இப்போது கொரோனாவைரஸ் நிதி சேரிப்புக்காக மீண்டும் ஒரு டேட்டிங் போகவுள்ளார்.

இன்ஸ்டாவில் பதிவு

இன்ஸ்டாவில் பதிவு

இதுதொடர்பாக அவர் போட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில் அமெரிக்காவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி சேகரிக்கிறேன். அவர்களுக்கு சாப்பாடு கிடைக்க உதவி செய்வதாக எனது தீவிர ரசிகர் பாப் முன்வந்துள்ளார். இதற்காக ரூ. 3 லட்சம் அளவுக்கு நிதி தருகிறார். என்னுடன் டேட்டிங் வர முடியுமா என்பதுதான் அவரது கோரிக்கை. அதை நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார் . இந்த பாப் யூஜெனியின் படு தீவிர ரசிகராம்.

டேட்டிங் போகிறார்

டேட்டிங் போகிறார்

போச்சார்ட் எதிர்பார்த்த தொகையை கொடுக்க இந்த ரசிகர் முன்வந்ததால் இவருடன் டேட்டிங் செல்லஅவர் ஓகே சொல்லி விட்டாராம். விரைவில் இருவரும் டேட்டிங் போகவுள்ளனராம். இவர்களுக்கு இடையே இந்த டீலை முடித்து வைத்தது லா போர்ஸ் என்பவர்தான். மேட்டர் அத்தோடு முடியவில்லை. பாப் மேலும் பணம் கொடுக்க விரும்புவதாகவும், தங்களது சந்திப்பின்போது இங்கிலாந்து உச்சரிப்புடன் தன்னுடன் பேச வேண்டும் என்றும் பாப் ஆர்வம் தெரிவித்தாராம்.

கொரோனாவைரஸ் நிதி

கொரோனாவைரஸ் நிதி

கூடுதல் பணம் வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த போச்சார்ட் அதற்கும் ஒத்துக் கொண்டாராம். இப்படியாக கொரோனாவைரஸ் நிதி சேகரிப்பில் வித்தியாசமான அனுபவத்தை சந்தித்துள்ளார் போச்சார்ட். தற்போது இவர்களின் டேட்டிங் அனுபவத்தைக் கேட்க டென்னிஸ் ரசிகர்கள் ஆர்வமாகி வருகின்றனர். போச்சார்டின் இந்த அதிரடி நிதி வசூல்தான் டென்னிஸ் உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

Story first published: Tuesday, April 14, 2020, 19:28 [IST]
Other articles published on Apr 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+