Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அவங்க கேட்ட அந்த கேள்விக்கு என்னய்யா பதில் சொல்லி வைச்சுருக்கீங்க?

மான்ட்ரியல் : கனடாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை யூஜினீ பூஷார்டு ட்விட்டரில் ஒரு கேள்வி கேட்டார்.

அந்த எளிதான கேள்விக்கு பதில் அளித்த பலர் கண்ட மேனிக்கு பதில் சொல்லி தெறிக்கவிட்டனர்.

யூஜினீயும் அது போன்ற ஒரு நபர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2017இல் ட்விட்டரில் அவர் செய்த காரியம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

பந்தயம் கட்டினார்

பந்தயம் கட்டினார்

2017இல் நடந்த அமேரிக்காவின் சூப்பர் பவுல் தொடரில் ஒரு போட்டியில் அட்லாண்டா அணி வெற்றி பெறும் என ட்விட்டரில் டேட்டிங் செல்வதாக பந்தயம் கட்டினார். எதிர்த்து ஆடிய நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணி தோல்வி அடையும் என்றார்.

டேட்டிங் போனார்

டேட்டிங் போனார்

ஜான் என்ற 20 வயது மாணவர் நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெறும் என கூறி பந்தயத்தை வென்றார். பந்தயத்தில் தோற்ற யூஜினீ அந்த மாணவருடன் டேட்டிங் சென்றார்.

அந்த கேள்வி

இப்படி லந்து செய்யும் யூஜினீ, சமீபத்தில் ட்விட்டரில் கேட்ட கேள்வி இது தான். "ஆர்டர் செய்ய சிறந்த பிட்சா எது?". இந்த சாதாரண கேள்விக்கு தான் கன்னாபின்னா என பதில் சொல்லி வாயை பிளக்க வைத்துள்ளனர் ட்விட்டர்வாசிகள். அவற்றில் சில -

புரியாத தத்துவம்

மரியாதை என்ற ஒரு விஷயம் உள்ளது அது ஆத்மாவில் பல அதிசயங்களை நிகழ்த்தும் என யாருக்கும் புரியாத தத்துவம் ஒன்றை சிறந்த பிட்சா எது என்ற கேள்விக்கு பதிலாக கூறி கலாய்த்துள்ளார் ஒருவர்.

வேற்றுக் கிரகவாசி அட்டகாசம்

வேற்றுக் கிரகவாசி போல ஒருவர் பதில் அளித்துள்ளார். அவர், "யூஜினீ பூஷார்டு-இடம் ஆர்டர் செய்ய சிறந்த வழி எது?" என தலையும் புரியாமல், வாலும் புரியாமல் கேட்டுள்ளார்.

என்ன ஒரு நையாண்டி?

நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள், ட்வீட் செய்து கொண்டு இருக்கிறீர்கள், பிட்சா உண்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று கூறி கலாய்த்துள்ளார். என்ன ஒரு நையாண்டி?

சொந்தமா செய்யுங்க

கொஞ்சோண்டு மாவு வாங்கி நீங்களே சொந்தமா பண்ணிக்குங்க.. நான் சொல்றதை நம்புங்க என எச்சரித்து இருக்கிறார் ஒருவர். பிட்சா எல்லாம் அவ்வளவு மோசமாவா இருக்கு?

அந்த அம்மாவுக்கு தெரியாதா?

நீங்க ஆர்டர் செய்து விட்டு எதை சாப்பிடுவீர்களோ அதை ஆர்டர் பண்ணுங்களேன் என கலாய்த்துள்ளார் ஒருவர். ஏன்பா.. அது அந்த அம்மாவுக்கு தெரியாதா?

Story first published: Saturday, September 28, 2019, 16:47 [IST]
Other articles published on Sep 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+