வந்தாரய்யா வந்தாரு… அரை இறுதிக்கு பெடரர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 43வது முறையாக அரை இறுதியில்
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விளையாட உள்ளார். 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவர், 20வது பட்டம் வென்று சாதனைப் படைக்க காத்திருக்கிறார்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதி நிலையை எட்டியுள்ளது. பல அதிர்ச்சி, ஆச்சரியங்களை இதுவரை சந்தித்த ஆஸ்திரேலிய ஓபனில் எதிர்பார்த்தபடியே நடந்தது, நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் ஆட்டம் மட்டுமே.
நேற்று நடந்த காலிறுதியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை 7-6, 6-3, 6-4 என நேர் செட்களில் வென்று, 14வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு நுழைந்தார் பெடரர். அரை இறுதியில் தென் கொரியாவின் ஹூவான் சுங்கை சந்திக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபனில், 105 ஆட்டங்களில், 92ல் வெற்றி என்பதில் இருந்து பெடரரின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம். ஆஸ்திரேலிய ஓபன் துவங்குவதற்கு முன்பே, பெடரர்தான் கோப்பையை வெல்வார் என்று பலராலும் கணிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அரை இறுதியில் குரேஷியாவின் மரின் சிலிக், இங்கிலாந்தின் கைல் எட்மண்ட் மோதுகின்றனர்
மகளிர் பிரிவின் அரை இறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் – ருமேனியாவின் சைமனோ ஹாலப் மோதுகின்றனர். மற்றொரு அரை இறுதியில், பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் – டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி மோத உள்ளனர்.
Story first published: Thursday, January 25, 2018, 22:59 [IST]
Other articles published on Jan 25, 2018


Click it and Unblock the Notifications