Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்ச் ஓபன் 2024- 21 வயதில் புதிய சாதனை- முதல் முறையாக சாம்பியனான அல்காரஸ்! ஸ்வெரேவ் போராடி தோல்வி

பாரீஸ் : பிரெஞ்சு ஓபன் 2024 ஆம் ஆண்டு ஆடவர் ஒற்றை பிரிவு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கைப்பற்றினார். பாரிஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றைப் பிரிவு இறுதிப் போட்டியில் 21 வயதான அல்காரஸ் நான்காம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார்.

அல்காரஸ், அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை ஏற்கனவே வென்றிருக்கிறார். ஆனால் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இதுவரை ஒரு முறை கூட கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது கிடையாது.

tennis Carlos alcaraz

இந்த நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவருக்குமே கடும் போட்டி ஏற்பட்டது. முதல் செட்டை ஆறுக்கு மூன்று என்ற கணக்கில் ஆல்காரஸ் கைப்பற்ற இரண்டாவது செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அபாரமாக விளையாடி ஆறுக்கு இரண்டு என்ற கணக்கில் தனதாக்கினார். இதன் அடுத்து மூன்றாவது செட்டில் இருவரும் அபாரமாக விளையாடிய நிலையில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தன்னுடைய அனுபவத்தை பயன் படுத்தி மூன்றாவது செடை ஏழுக்கு ஐந்து என்ற கணக்கில் கைப்பற்றினார்.

எனினும் யாருமே எதிர்பாராத வகையில் கடைசி இரண்டு செட்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கடுமையாக தடுமாறினார். நேரம் ஆக ஆக அவருடைய பவர் குறைந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட அல்காரஸ் கடைசி இரண்டு செட்டையும் 6க்கு1,6க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் 4 மணி நேரம் 19 நிமிடம் நீடித்த இந்த போட்டியில்,அல்காரஸ் 6 க்கு 3, 2க்கு 6, 5 க்கு 7, 6க்கு1, 6க்கு 2 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் அமெரிக்க ஓபன், விம்பிள்டன் ஆகிய பட்டங்களை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை அல்காரஸ் படைத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அல்காரஸ் நான் சிறுவயதில் தொலைக்காட்சியில் தான் இந்த போட்டிகளை பார்த்திருக்கிறேன். தற்போது பிரெஞ்சு ஒப்பனை கைப்பற்றி இருக்கின்றேன் என்று நம்ப முடியாத வகையில் பேசினார். ஜோகோவிச், பெடரர், நடால் ஆகியோக்கு பிறகு டென்னிஸ் உலகை யார் ஆளப்போகிறார் என்று எழுந்த கேள்விக்கு தற்போது அல்காரஸ் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை 21 வயதிலேயே வென்று பதில் கொடுத்து இருக்கின்றார்.

Story first published: Monday, June 10, 2024, 0:05 [IST]
Other articles published on Jun 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+