Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்ச் ஓபன் - 24 வயது வீராங்கனை படைத்த ஹாட்ரிக் சாதனை.. 'ஸ்வியாடெக்' டென்னிஸ் -இன் புதிய ராணி

பாரீஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஓற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக போலாந்து வீராங்கனை ஸ்வியாடென் வென்றார். பாரீஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாலோனியை வீழ்த்தினார். களிமண் தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றை பிரிவில் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக் மற்றும் 12வது நிலை வீராங்கனை ஆன இத்தாலியை சேர்ந்த ஜாஸ்மின் பலோனியும் பலப்பரிட்சை நடத்தினர்.

பலோணிக்கு இது முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டி ஆகும். 23 வயது ஆன ஸ்வியாடெக் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் ஸ்வியாடெக் 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது முறையாக பாரிஸ் ஓபன் பட்டதை கைப்பற்றினார். இது ஒட்டுமொத்தமாக அவருக்கு ஐந்தாவது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டமாகும். இவர் ஏற்கனவே 2022ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்.

french open

மேலும் பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையை ஸ்வியாடெக் பெற்று இருக்கிறார். இவர் பிரெஞ்சு ஓபனில் தொடர்ந்து 21 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவு வரலாற்றில் தொடர்ந்து இத்தனை போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் வரிசையில் இது நான்காவது இடமாகும்.

பிரெஞ்ச் ஒபனில் இவர் மொத்தமாக 37 போட்டிகளில் 35 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் 2021 பிரென்ச் ஓபன் போட்டிக்கு பிறகு இவர் இந்த தொடரில் தோற்றது கிடையாது. பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அதிக முறை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் கிறிஸ் எவர்ட் ஸ்டெபி கிராஃப், ஜஸ்டின் ஹெனின் பிறகு ஸ்வியாடெக் தான் இடம் பெற்றிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்வியாடெக், எனக்கு பாரிஸ் மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து விளையாடுவதை நான் எதிர்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த போட்டியில் தோல்வியுற்ற பாலோனி ஸ்வியாடெக்கை எதிர்கொண்டு விளையாடுவது டென்னிஸ் விளையாட்டில் மிக கடுமையான சவால் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

Story first published: Saturday, June 8, 2024, 23:57 [IST]
Other articles published on Jun 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+