Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நோவக் ஜோகோவிக் பாதியில் விலகல்.. என்ன நடந்தது?

பாரிஸ் : பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிக் செவ்வாய்கிழமை நடந்த போட்டியில் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அந்த டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார்.

இதனால் அவரது சாம்பியன் பட்டம் வேறு ஒரு வீரருக்கு செல்வது உறுதியாகி இருக்கிறது. செர்பிய நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரரான நோவக் ஜோகோவிக் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக அளவில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

Novak Djokovic French Open

தற்போது அவர் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து பாதியில் விலகுவதன் மூலம் அவர் தனது முதல் இடத்தை இழக்க நேரிடும். ஜோகோவிக்கின் வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ-உடன் ஆடினார் ஜோகோவிக். அந்தப் போட்டியில் ஐந்து செட்கள் வரை போராடி வென்றார். சுமார் 4 1/2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போட்டியின் இடையே அவர் காயம் காரணமாக சிறிது நேரம் சிகிச்சைக்காக இடைவேளை எடுத்துக் கொண்டார். பின்னர் போட்டி முடிந்த உடன் மறுநாள் MRI ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது காயத்தின் ஆழம் கண்டறியப்பட்டது. அதன் முடிவில் அவர் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர் புதன்கிழமை காலிறுதியில் இரண்டு முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த காஸ்பர் ரூட்டை சந்திக்க இருந்தார். தற்போது ரூட் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். அங்கு அவர் நம்பர் 4 அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அல்லது நம்பர் 11 அலெக்ஸ் டி மினாரை எதிர்கொள்வார்.

Story first published: Tuesday, June 4, 2024, 23:34 [IST]
Other articles published on Jun 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+