Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் தொடக்கம்.. முதல் நாளே நோவக் ஜோகோவிச், ஸ்வெரெவ் ஆட்டம்

பாரிஸ்: டென்னிஸ் உலகின் மிக உயரிய தொடர்களில் ஒன்றான 2026 பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி பாரிஸ் நகரில் உள்ள ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளிலேயே உலகின் முன்னணி நட்சத்திரங்களான நோவக் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மற்றும் இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் களம் இறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சுமார் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் ஜியோவானி பெர்ரிகார்டை எதிர்கொள்கிறார். சமீபகாலமாக களிமண் தரை மைதானங்களில் உடல் தகுதி மற்றும் பார்ம் அவுட் காரணமாக ஜோகோவிச் சற்றுத் தடுமாறி வருவதால், இந்தத் தொடரில் அவர் மீண்டு வருவாரா என்பதே டென்னிஸ் ஆர்வலர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 11:45 மணிக்கு மேல் இந்த ஆட்டம் தொடங்குகிறது.

French Open 2026 Begins Today Novak Djokovic and Mirra Andreeva Lead Day 1 Action

மற்றொரு முக்கிய ஆட்டத்தில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்சியுடன் மோதுகிறார். மகளிர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ரஷ்யாவின் 19 வயது இளம் புயல் மிர்ரா ஆண்ட்ரீவா, பியோனா பெரோவைச் சந்திக்கிறார். இதேபோல் டெய்லர் ஃபிரிட்ஸ், கரன் காச்சனோவ் மற்றும் முன்னாள் சாம்பியன் பார்போரா கிரெஜ்சிகோவா ஆகியோரும் இன்று தங்களது சவாலைத் தொடங்குகின்றனர்.
வளர்ந்து வரும் வீரர்களான பிரேசிலின் ஜாவ் பொன்சேகா, ஜக்குப் மென்சிக் போன்ற இளம் வீரர்களின் ஆட்டங்களும் முதல் நாளில் நடைபெற உள்ளன. மொத்தம் மூன்று முக்கிய மைதானங்களில் முதல் சுற்று ஆட்டங்கள் பிரித்து நடத்தப்பட உள்ளன.

பிரெஞ்சு ஓபன் 2026 - முதல் நாள் முக்கிய ஆட்டங்களின் அட்டவணை:

பிலிப்-சாட்ரியர் மைதானம்

  • சின்ஜா கிராஸ் vs பெலிண்டா பென்சிக் (மகளிர் ஒற்றையர்)
  • பெஞ்சமின் போன்சி vs அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஆடவர் ஒற்றையர்)
  • மிர்ரா ஆண்ட்ரீவா vs பியோனா பெரோ (மகளிர் ஒற்றையர்)
  • ஜியோவானி பெர்ரிகார்ட் vs நோவக் ஜோகோவிச் (ஆடவர் ஒற்றையர் - இரவு 11:45 மணிக்கு மேல்)

சுசான் லெங்லன் மைதானம்

  • கரன் காச்சனோவ் vs ஆர்தர் ஜியா (ஆடவர் ஒற்றையர்)
  • ஹெய்லி பாப்டிஸ்ட் vs பார்போரா கிரெஜ்சிகோவா (மகளிர் ஒற்றையர்)
  • டெய்லர் ஃபிரிட்ஸ் vs நிஷேஷ் பசிவரா ரெட்டி (ஆடவர் ஒற்றையர்)
  • செனியா எபிரெமோவா vs சோரானா சிர்ஸ்டியா (மகளிர் ஒற்றையர்)

சைமன் மேத்யூ மைதானம்

  • மார்டா கோஸ்ட்யுக் vs ஆக்சானா செலேக்மெட்வா (மகளிர் ஒற்றையர்)
  • கேட்டி வோலினெட்ஸ் vs கிளாரா பூரல் (மகளிர் ஒற்றையர்)
  • டிடுவான் ட்ரோகுயெட் vs ஜக்குப் மென்சிக் (ஆடவர் ஒற்றையர்)
  • ஜாவ் பொன்சேகா vs லூகா பாவ்லோவிக் (ஆடவர் ஒற்றையர்)
Story first published: Sunday, May 24, 2026, 8:28 [IST]
Other articles published on May 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+