Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்ச் ஓபன் 2026: மகளிர் பிரிவில் புதிய ஷரபோவா.. சாதனை படைத்த 19 வயதான ரஷ்ய வீராங்கனை மீரா

2026-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் 19 வயது மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். தகுதிச் சுற்றில் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போலந்தின் மியா ஸ்வாலின்ஸ்காவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி, ஆண்ட்ரீவா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பையை கையில் ஏந்தினார்.

ஜூன் 6 அன்று பாரிஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், எட்டாம் நிலை வீராங்கனையான ஆண்ட்ரீவா, மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டு, ஸ்வாலின்ஸ்காவின் கனவுப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இளம் வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த விளையாட்டை வெளிப்படுத்திய ஆண்ட்ரீவாவிற்கு இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இவருடைய இந்த வெற்றியானது, பிரெஞ்சு ஓபனில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளம் வீராங்கனை ஒருவர் நிகழ்த்திய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாகப் பார்க்கையில், 1992-ஆம் ஆண்டில் 18-வது வயதில் மகுடம் சூடிய மோனிகா செலெஸிற்குப் பிறகு, பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற இள வயது வீராங்கனை என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார். மேலும், 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த வீரர் அல்லது வீராங்கனைகளில், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் நபரென்ற பெருமையும் ஆண்ட்ரீவாவைச் சேருகிறது. 15 வயதிலிருந்தே டென்னிஸ் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவர், இன்று உலகின் முன்னணி வீராங்கனையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

மறுபுறம், போலந்தின் மியா ஸ்வாலின்ஸ்கா இந்தத் தொடர் முழுவதும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். தகுதிச் சுற்றிலிருந்து இறுதிப் போட்டி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற ஓபன் எரா கால சாதனையை அவர் படைத்தார். உலகத் தரவரிசையில் 114-வது இடத்திலிருந்து தற்போது 21-வது இடத்திற்கு அவர் முன்னேற உள்ளார். இவருடைய இந்த அதிரடி வளர்ச்சி, வரும் காலங்களில் உலகின் முன்னணி டென்னிஸ் தொடர்களில் இவர் தொடர்ந்து பங்கேற்க புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

போட்டியின் தொடக்கத்தில், மைதானத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் இறுதிப் போட்டியின் பதற்றம் காரணமாக இரு வீராங்கனைகளும் சற்று தடுமாறினர். ஸ்வாலின்ஸ்கா சில துல்லியமான டிராப் ஷாட்களை விளையாடி முன்னிலை பெற முயன்றாலும், ஆண்ட்ரீவா தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தை நேர்த்தியாக ஒருங்கிணைத்தார். குறிப்பாக, காற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர் அடித்த பேக்ஹேண்ட் வின்னர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றின.

உலககோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமாரை நீக்குவது சுலபமாக இல்லை.. எதிர்காலத்தை நோக்கி முடிவு- அகர்கர்

உலககோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமாரை நீக்குவது சுலபமாக இல்லை.. எதிர்காலத்தை நோக்கி முடிவு- அகர்கர்

இரண்டாவது செட்டில், ஸ்வாலின்ஸ்காவின் பிழைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட ஆண்ட்ரீவா, ஆட்டத்தின் கட்டுப்பாட்டை முழுமையாகத் தன்வசப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஸ்வாலின்ஸ்கா மீண்டு வர முயற்சித்தாலும், ஆண்ட்ரீவாவின் அபாரமான ஆட்டத்திற்கு முன்னால் அது எடுபடவில்லை. ஆட்டத்தின் முடிவில், தரையில் மண்டியிட்டு தனது வெற்றியைக் கொண்டாடிய ஆண்ட்ரீவா, தனது பயிற்சியாளர் கன்ச்சிதா மார்டினெஸின் முந்தைய சாதனையை விஞ்சி, புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார்.

Story first published: Saturday, June 6, 2026, 23:28 [IST]
Other articles published on Jun 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+