பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்.. சாம்பியன் பட்டம் வென்றார் ஜெலினா ஆஸ்டாபென்கோ
பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ஜெலினா ஆஸ்டாபென்கோவும் (லாத்வியா) சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி பாரீசில் இன்று நடைபெற்றது.

இதில் பெண்கள் ஒற்றையரில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவும் (லாத்வியா) பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பான ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை தோற்கடித்தார். 4-6,6-4,6-3 என்ற செட்களில் ஜெலினா ஆஸ்டாபென்கோ வென்றார். பட்டம் வென்ற வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ ரூ.15 கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் லாத்வியா நாட்டவர் என்ற சாதனையை 20 வயதான ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.
Story first published: Saturday, June 10, 2017, 22:02 [IST]
Other articles published on Jun 10, 2017


Click it and Unblock the Notifications