Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - நடால் புதிய சாதனை.. அரையிறுதியில் ஜெர்மனி வீரருக்கு காயம்.. கால் மடங்கியது

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் 14வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.

13 முறை சாம்பியனான நடால், ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலாக்சண்டருடன் மோதினார்.

நடாலுக்கு எற்கனவே காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆட்டத்தில் அவர் பெரும் துயரத்தில் தான் பங்கேற்றார்.

நடாலுக்கு பிறந்தநாள்

நடாலுக்கு பிறந்தநாள்

நேற்று நடாலுக்கு 36வது பிறந்தநாள் என்பதால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பிரெஞ்ச் மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். போட்டி தொடக்கத்தில் இருந்ததே 25 வயதான ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தினார். நடாலின் காயம் சரி ஆகவில்லை என்பதால், அவர் திணறினாலும், தனது விடா முயற்சியை நடால் விடவில்லை. தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் முதல் செட் 6க்கு6 என்ற கணக்கிற்கு சென்றது.

ஸ்வெரேவ் காயம்

ஸ்வெரேவ் காயம்

இதனையடுத்து டை பிரேக் முறையில், நடால் வென்று முதல் செட்டை தனதாக்கினார். 2வது செட்டில் நடால், 5க்கு3 என்ற கணக்கில் முன்னிலை இருந்தார். அதன் பின் தொடர்ந்து அலெக்சாண்டர் அதிரடியை காட்ட 2வது செட்டும் டை பிரேக்கிற்கு சென்றது. எனினும் அப்போது பந்தை அடிக்க முயன்ற அலெக்சாண்டர் சறுக்கி கொண்டு கணுங்கால் மடங்கி கீழே விழுந்தார்.

போட்டியிலிருந்து விலகல்

போட்டியிலிருந்து விலகல்

இதனால் வலியால் துடித்த அலெக்சாண்டரை மருத்துவக் குழுவினர் சோதித்து வீல் சேரில் அழைத்து சென்றனர். சிறிமு நேரத்திற்கு பிறகு வந்த ஸ்வெரேவ், காயத்தால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து நடால் அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். ஸ்வெரேவ் விலகியதால், நடால் 14வது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிக்கு சென்றார்.

நடால் வருத்தம்

நடால் வருத்தம்

இந்தப் போட்டி குறித்து பேசிய நடால், இறுதிப் போட்டிக்கு இப்படி செல்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சிறப்பாக விளையாடினார். முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல அவர் எப்படி போராடினார் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக அவர் ஒன்றுக்கு மேல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடால், நார்வே வீரர் ருத்துடன் மோத உள்ளார்.

Story first published: Saturday, June 4, 2022, 7:05 [IST]
Other articles published on Jun 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+