ஆயிஷா சர்ச்சை - சானியாவுடன் திருமணம் – ஹைதராபாத் வந்தார் சோயப் மாலிக்

சோயப் மாலிக்கின் முதல் மனைவியாக கூறப்படும் ஆயிஷாவால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. தான்தான் சோயப் மாலிக்கின் முதல் மனைவி. என்னை அவர் விவாகரத்து செய்தால் போதும், வேறு ஒன்றும் எனக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் ஆயிஷா.
ஆனால் இந்தத் திருமணமே நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார் சோயப் மாலிக். இதையடுத்து தனக்கும் சோயப் மாலிக்குக்கும் இடையே நடந்த திருமணம் தொடர்பான திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஆயிஷா.
இந்த நிலையில் இன்று திடீரென ஹைதராபாத் வந்து சேர்ந்தார் சோயப் மாலிக். சானியா - சோயப் மாலிக் திருமணம் ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பிற்பகல் ஹைதராபாத் வந்து சேர்ந்தார் சோயப்.
திட்டமிட்டபடி ஹைதராபாத்தில் கல்யாணம்- சானியா குடும்பம
இதற்கிடையே, ஆயிஷா சர்ச்சையால், திருமணத்தை துபாய்க்கு மாற்ற சானியா, சோயப் குடும்பத்தினர் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை சானியா மிர்ஸா குடும்பத்தினர் மறுத்துள்ளனர். திருமணம் திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி ஹைதராபாத்திலேயே நடைபெறும் என்றும் துபாய்க்கு மாற்றவில்லை என்றும் சானியா குடும்பத்தினர் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications