இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரருக்கு இந்த நிலையா? கையில் காசு இல்லை.. உதவுங்கள் என சுமித் வேதனை
மும்பை : உலகத்தில் அதிக மக்களால் பார்க்கக்கூடிய விளையாட்டில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கக் கூடியது டென்னிஸ் தான். டென்னிஸில் ஒரு வீரர் வெற்றி பெற்று முன்னுக்கு வந்தால் அவர் உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்து விடுவார்.
இப்படித்தான் டென்னிஸ் நிலைமை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருக்கும் சுமிக் நிகால், தமது கையில் சுத்தமாக காசு இல்லை என்று வெளிப்படையாக உதவி கேட்டு இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் டென்னிஸ் தர வரிசையில் இந்திய அளவில் நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். ஆனால் என்னுடைய வங்கிக் கணக்கை பார்த்தீர்கள் என்றால் அதில் வெறும் 78 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது. எனக்கு ஐஓசிஎல் நிறுவனத்திடம் இருந்து மாதம் சம்பளம் வருகிறது. அதை வைத்து தான் என்னுடைய அன்றாட செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தான் நான் டென்னிஸ் விளையாடுவதற்கான உபகரணங்களை வாங்குகிறேன். எனக்கு என்று எந்த பெரிய ஸ்பான்சரும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் நான் விளையாட்டுக்கு என எந்த பணத்தையும் சேமிக்கவில்லை. என் கையில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்து தான் தற்போது வரை சமாளித்துக் கொண்டிருக்கின்றேன்.
டென்னிஸ் பொருத்தவரை இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக நான் இருக்கின்றேன். ஆனால் அதற்கு தேவையான நிலையில் நான் இல்லை. எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. தற்போது சர்வதேச தரவரிசை பட்டியலில் என்னுடைய இடம் சரிந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தற்போது யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
மேலும் எனக்கு காயமும் ஏற்பட்டிருக்கிறது.அதில் இருந்து குணமடைய தேவையான உதவியும் கிடைக்கவில்லை. இந்தியாவில் விளையாட்டுக்கு என்று உதவி கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது விளையாட்டுக்கு என்று போதிய நிதி இல்லை. விளையாட்டு வீரர்களை பார்த்துக் கொள்ள எந்த சிஸ்டமும் நமது நாட்டில் இல்லை என்று சுமித் நாகல் கூறியிருக்கிறார். டென்னிஸ் வீரர்களில் பலரும் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு இல்லை அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே ஜோகோவிச் போன்ற வீரர்கள் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications