லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் சானியா தோல்வியடைந்து விட்டார்.
மகளிர் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் சானியா மிர்ஸா, கரோலின் வோஸ்னியாகி ஜோடி ஜிம்பாப்வே-ஸ்லோவேகியா ஜோடியான காரா பிளாக் மற்றும் டேனியலா ஹன்டச்குவா ஜோடியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் 6-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது சானியா ஜோடி.
அதேபோல இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் லீசல் ஹிபூயர் ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ரஷ்ய ஜோடியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி ஜோடி 3வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.