
அடுத்த சுற்று
பெடரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த இளம் வீரர் நாகல் தகுதிபெற்று, முதல் முறையாக யுஎஸ் ஓபன் டென்னிஸ் பிரதான சுற்றுக்கு முன்னேறினார். அப்போது அவருக்கு வாழ்த்துகள் குவிந்தாலும் யாரும் பெரிதளவு அலட்டிக் கொள்ள வில்லை.

வாழ்த்துகள் தேவை
ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்த்துகளும் அவருக்கு தேவைப்பட்டது. காரணம், அவர் தனது முதலாவது சுற்றில், டென்னிஸ் உலகின் முன்னணி வீரர் ரோஜர் பெடரரை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

டிரெண்டானார்
முதலாவது சுற்றில் பெடரரை சந்தித்தார். முன்னணி வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற அச்சமே இன்றி இயல்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். முதல் செட்டை 6க்கு 4 என்று கைப்பற்ற டிரெண்டானார்.

வாழ்த்து சொன்ன கோலி
உலகின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அந்த சுற்றில் அவர் தோற்கவில்லை, சுதாரித்துக் கொண்ட பெடரர் பின்னர் விளையாடி ஜெயித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டத்தில் அவர் தோற்றாலும், போட்டிக்கு முன்பே அவரது திறமையை அறிந்து கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறியிருக்கிறார் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
உற்சாகப்படுத்துகிறோம்
அவர் தமது வாழ்த்தில் கூறியிருப்பதாவது: யு.எஸ் ஓபனுக்கு தகுதி பெற்றதற்கு வாழ்த்துகள் சுமித் நாகல். உங்களுக்கு பெரும் போட்டி ஒன்று இருக்கிறது. கிரேட் ரோஜர் பெடரரை எதிர்கொள்ள உள்ளீர்கள். உங்களை நாங்கள் உற்சாகப் படுத்துவோம். குட்லக்! என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











