Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்…!! நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி! ரசிகர்கள் ஷாக்..!

டெல்லி: நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானுக்கு செல்கிறது இந்திய டென்னிஸ் அணி.

கிரிக்கெட் போட்டிகளில் ஆஷஸ் தொடரை அடுத்து மிகவும் விறு விறுப்பான போட்டி ஒன்று இருக்கிறது. அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி ஆகும்.

சில ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லை மோதல்களின் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் சுற்றுப்பயணம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அதனால் இரு நாட்டு ரசிகர்கள் கடுமையாக ஏமாந்து போயினர்.

இருநாடுகளின் போட்டிகள்

இருநாடுகளின் போட்டிகள்

ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் தற்போது வரை மோதிக் கொள்கின்றனர். கிரிக்கெட் உலகில் இனி இந்த இரு நாடுகளில் மோதிக் கொள்ளும் போட்டி என்பது கனவாக போய்விட்டது என்று கூறலாம்.

ஒப்புதல் தந்தது

ஒப்புதல் தந்தது

அந்த தொடரில் இந்தியா எப்படியும் பங்கேற்காது என்றுதான் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய டென்னிஸ் சங்கம் அதற்கான ஒப்புதலை அளித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

55 ஆண்டுகள் கழித்து

அதன்படி, இந்திய வீரர்களை பாகிஸ்தான் செல்ல அனுமதித்துள்ளது. செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடை பெறுகிறது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்திய டென்னிஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் சங்கம் பதில்

டென்னிஸ் சங்கம் பதில்

இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து சமூக வலை தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதற்கு பதிலளித்த இந்திய டென்னிஸ் சங்கம்,இரு நாடுகள் மோதும் தொடர் என்றால் அதற்கு நாங்கள் அனுமதி கொடுத்திருக்க மாட்டோம்.

பாதிக்கும்

பாதிக்கும்

ஆனால், இது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகிற்கும் நடக்கும் தொடர். தனிப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான கருத்தை ஒரு தொடரில் எடுத்துச் செல்ல இயலாது. அது வீரர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது.

Story first published: Sunday, July 28, 2019, 14:27 [IST]
Other articles published on Jul 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+