Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Indian Wells: ஷாக்... ! நம்பர் 1 வீராங்கனை ஒசாகா தோல்வி... நேர் செட்டுகளில் வீழ்ந்தார்

கலிபோர்னியா:இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், உலகின் நம்பர் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் மைதானத்தில், பி.என்.பி. பாரிபாஸ் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முந்தைய போட்டி நடைபெற்றது.

Indian wells: dubai champion belinda bencic shocks world no 1 naomi osaka

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பான் இளம் வீராங்கனை நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்டார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் சிறப்பாக ஆடி வந்த நவோமி ஒசாக, முதல் செட்டை 3-6 என பென்சிக்கிடம் பறிகொடுத்தார்.

Indian wells: dubai champion belinda bencic shocks world no 1 naomi osaka

அடுத்த செட்டிலும் ஆக்ரோஷமாக சுவிஸ் வீராங்கனை பென்சிக் ஆக்ரோஷமாக விளையாடினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. 2வது செட்டையும் 6-1 என்று எளிதாக கைப்பற்றினார். 6-3, 6-1 என்ற நேர்செட்களில் தோற்றதால் நடப்பு சாம்பினான ஒசாகா தொடரிலிருந்து வெளியேறினார்.

சமீபத்தில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தற்போது இந்தியன் வெல்ஸ் தொடரிலும் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, March 13, 2019, 12:55 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+